Last Updated : 02 Feb, 2019 09:35 AM

 

Published : 02 Feb 2019 09:35 AM
Last Updated : 02 Feb 2019 09:35 AM

பிறமொழி நூலகம்: எங்கே போகிறோம்?

தொழில்நுட்பம், மருத்துவ ஆராய்ச்சி, மூளை குறித்த அறிவியல், உளவியல், இயற்பியல், பொருளாதாரம், மானுடவியல், பருவநிலை குறித்த அறிவியல், மரபணுவியல் போன்ற அறிவியலின் வளர்ச்சி உலகத்தைப் பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது இப்புத்தகம். புதிய அறிவியல் கருத்துகளுக்கான தங்கச் சுரங்கமாக விளங்கும் edge.org என்ற இணையதளத்தின் பதிப்பாளரான ஜான் ப்ராக்மன், அறிவியல் தொடர்பான கேள்விகளைப் பல்வேறு அறிவியல் துறைகளைச் சேர்ந்த 198 ஆளுமைகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள் அளித்த பதில்தான் தனிச்சிறப்பான இந்நூல். நோபல், புலிட்சர் போன்ற பரிசுகளை வென்ற ஆளுமைகள் பலரும் மனித இனத்தின் எதிர்காலத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அறிவியல் கருத்துகளை முன்வைத்துள்ள இந்நூல், அறிவியல் ஆர்வலர்கள் மட்டுமின்றி, மனிதகுலம் பற்றி சிந்திக்கும் அனைவருக்கும் பயனுள்ளதாக விளங்கும்.

க்நோ திஸ் – டுடேஸ் மோஸ்ட் இண்ட்ரஸ்டிங் அண்ட் இம்பார்ட்டண்ட் சயிண்ட்டிஃபிக் ஐடியாஸ், டிஸ்கவரீஸ் அண்ட் டெவலெப்மெண்ட்ஸ்

தொகுப்பாசிரியர்:

ஜான் ப்ராக்மன்

ஹார்ப்பர் பெரென்னியல்

புதுடெல்லி

விலை: ரூ.399

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x