Published : 22 Dec 2018 09:32 AM
Last Updated : 22 Dec 2018 09:32 AM

நூல் நோக்கு: நதியும் சில பெண்களும்

“காவிரிப் படுகையே எனது கதைக்களம், விவசாயிகள் வேதனையில் வாடும் இன்றைய நிலையில் நான் வேறெதை எழுத முடியும்” என்கிறார் சிவகுமார் முத்தய்யா. விவசாய வாழ்க்கை விரிவாகப் பதிவாகியிருந்தாலும் சிவகுமாரின் கதைகள் பெண்களையே மையமாகக் கொண்டவை. கடந்த சில பத்தாண்டுகளில் கிராமத்து நிலவெளிகளில் நிகழ்ந்துகொண்டிருக்கும் மாற்றங்களின் குறியீடுகளாகப் பெண்கள் இருக்கிறார்கள். கொடிக்கால்காரி நீலவேணியைத்தான் அவர் எழுதுகிறார். ஆனால், அது வாஞ்சியம் கிராமத்தின் கதை. வனசுந்தரியைத்தான் எழுதுகிறார். அது ஆட்டக்கலைஞர்களின் துயர்மிகு வாழ்க்கை. இசைக்கான பெண்களின் ஏக்கத்துக்கு உளவியல் விளக்கம் தர முயல்கிறது ‘இளையராஜாவின் காதலிகள்’.

- புவி

இளையராஜாவின் காதலிகள்

சிவகுமார் முத்தய்யா

யாவரும் பதிப்பகம்

வேளச்சேரி,

சென்னை-42.

விலை: ரூ.160

 90424 61472

எம்ஜிஆர் எனும் சகாப்தம்

எதிர்வரும் 24-ம் தேதியுடன் எம்ஜிஆர் மறைந்து 31 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இன்னமும் அவரைப் பற்றிய நூல்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. என்பதே அவர் எந்த அளவுக்கு மக்கள் மனங்களில் வாழ்கிறார் என்பதற்குச் சான்று. இதோ, ‘பொம்மை’ சாரதியின் நூல் இப்போது புதிதாக வெளிவந்திருக்கிறது. ‘பொம்மை’ சினிமா இதழின் ஆசிரியராக இருந்த இவர், எம்ஜிஆரோடு பழகிய அனுபவங்களை இந்நூலில் பதிவுசெய்துள்ளார். எம்ஜிஆரின் பேட்டிகள், கேள்வி - பதில் தொகுப்புகள், திரையுலகின் வசூல் சக்கரவர்த்தி, வள்ளல் தன்மை, சாதுர்யம், அரசியல் ஆளுமை என எம்ஜிஆரின் பன்முகத்தன்மைகளை விரிவாகப் பேசும் நூல் இது. ‘பொம்மை’ ஆண்டு விழா மலருக்காக 1968-ல் எம்ஜிஆரை ஜெயலலிதா எடுத்த பேட்டி ‘ஹைலைட்’.

- ஸ்ரீதர் சுவாமிநாதன்

மக்கள் மனதில்

எம்.ஜி.ஆர்.

‘பொம்மை’ சாரதி

கவிதா பப்ளிகேஷன்

தி.நகர், சென்னை-17.

விலை: ரூ.200

 74022 22787

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x