Published : 15 Dec 2018 09:11 AM
Last Updated : 15 Dec 2018 09:11 AM
தொழில் - வர்த்தகத் துறையைச் சேர்ந்த 28 ஆளுமைகளுடன் நிகழ்த்தப்பட்ட செறிவான உரையாடல்களின் தொகுப்பு இது. பொருளாதாரச் சீர்திருத்தங்கள் அமலுக்கு வந்த பிறகு இந்தியாவின் தொழில், சேவைப் பிரிவுகளில் பெருத்த மாறுதல்கள் நிகழ்ந்தன. இன்ஃபோசிஸ், ஜெட் ஏர்வேஸ் போன்ற புதிய தொழில் நிறுவனங்கள் உருவாகின. இந்நிறுவனங்கள் கையாண்ட உத்தி, அவற்றின் வளர்ச்சி வரிசையாக ஆவணப்படுத்தப்படவில்லை. பொருளாதாரம், தொழில் கொள்கை, சந்தை நிலவரம், ஒரே மாதிரியான தொழில்நிறுவனங்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் எப்படிச் செயல்படுகின்றன என்ற தகவல்கள் தொழில், சேவைத் துறைகளுக்கு அவசியம். இந்தத் தகவல் இடைவெளியை இந்து குழுமத்தின் ‘பிசினஸ் லைன்’ நாளிதழ் பூர்த்திசெய்கிறது.
டேபிள் டாக்
தி இந்து குழுமம்
கஸ்தூரி பில்டிங்ஸ்
859 & 860
அண்ணா சாலை, சென்னை-2.
விலை: ரூ.299
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT