Last Updated : 08 Dec, 2018 08:55 AM

 

Published : 08 Dec 2018 08:55 AM
Last Updated : 08 Dec 2018 08:55 AM

பிறமொழி நூலகம்: கூர்நோக்கில் தென்னிந்திய வரலாறு

பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு முந்தைய தென்னிந்தியாவில் மதம், பாரம்பரியம், தத்துவம் ஆகியவற்றின் நிலையை விரிவாக எடுத்துக்கூற முனைகிறது இந்நூல். தென்னிந்தியாவில் சமண, புத்த சமயங்களைப் புறந்தள்ளிவிட்டு வேதவழி பிராமணிய முறை மேலாதிக்கம் செலுத்தத் தொடங்கியதன் பின்னணியை விரிவாக ஆராய்கிறது. ஒன்றுக்கொன்று முரணான நம்பிக்கைகள், சடங்குகள் ஆகியவற்றை எவ்வாறு இந்து மதம் படிப்படியாகப் பாரம்பரியத்துக்குள் இழுத்துவந்தது என்பதை எடுத்துக் கூறுகிறார் இந்திய வரலாற்று அறிஞர் சம்பகலக்ஷ்மி. கோயில் என்ற நிறுவனம் மக்களை ஒருங்கிணைப்பதிலும் அரசியல் அதிகாரத்தின் ஓர் அடையாளமாகவும் எப்படி வளர்ச்சியடைந்தது என்பதையும் கடவுளையும் அரசனையும் சமநிலைக்கு உயர்த்தியதன் அவசியத்தையும் தென்னிந்தியக் கட்டிடக் கலை, நாணய வரலாறு ஆகியவற்றையும் இந்நூல் தெள்ளத் தெளிவாக முன்வைக்கிறது.

ரிலிஜியன்,

ட்ராடிஷன் அண்ட் ஐடியாலஜி:

ப்ரீ-காலனியல் சவுத் இந்தியா

ஆர். சம்பகலக்ஷ்மி

ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிடி ப்ரஸ்

புதுடெல்லி-110002.

விலை: ரூ.1595

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x