Published : 24 Nov 2018 10:09 AM
Last Updated : 24 Nov 2018 10:09 AM

திண்டுக்கல் & பழனியில் புத்தகத் திருவிழா

திண்டுக்கல் இலக்கியக் கூடம் நடத்தும் 7-வது புத்தகத் திருவிழா நவம்பர் 29 முதல் டிசம்பர் 09 முடிய நடைபெறுகிறது. இடம்: ஸ்கீம் ரோடு, பேருந்து நிலையத் தென்புறம், திண்டுக்கல்.

திண்டுக்கல் இலக்கியக் களம் நடத்தும் முதலாம் ஆண்டு புத்தகத் திருவிழா நவம்பர் 22 தொடங்கி 26 வரை நடைபெறுகிறது. இடம்: சக்தி திருமண மண்டபம், பழனி.

தினமும் காலை 11 மணி இரவு 9 மணி வரை நடைபெறும் புத்தகக்காட்சியில் 10% கழிவில் புத்தகங்கள் வாங்கிக்கொள்ளலாம்.

puzhaljpg

புழல் கைதிகளுக்குப் புத்தகம்

நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த அனுபவம், பொதுச் சேவையில் கிடைத்த அனுபவங்கள் இவற்றைக் கொண்டு ஈ.பி.திருமலை எழுதியிருக்கும் ‘இக்கரையா, அக்கரையா?’

 எனும் புத்தகத்தின் பிரதிகள், சென்னை புழல் சிறைச்சாலையில் உள்ள 1,000 கைதிகளுக்கு நவம்பர் 28 அன்று வழங்கப்படுகின்றன. ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டிருக்கும் இப்புத்தகம், சுயமுன்னேற்றத்துக்கான அரிய கருத்துகள் அடங்கியது என்கிறார் நூலாசிரியர் திருமலை.

ஆங்கிலத்தில் வைத்தீஸ்வரன் கவிதைகள்

கவிஞர் எஸ்.வைத்தீஸ்வரன் 1961 முதல் 2017 வரை எழுதிய கவிதைகள் அனைத்தும் லதா ராமகிருஷ்ணனால் தொகுக்கப்பட்டு 488 பக்க முழுக் கவிதைத் தொகுப்பாக சமீபத்தில் வெளிவந்தது.

இப்போது வைத்தீஸ்வரனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டு ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. ‘மவுண்ட்ஸ் வேலிஸ் அண்ட் மைசெல்ஃப்’ என்ற தலைப்பில் அழகுற வெளியிட்டிருக்கிறது ஹவாகல் பப்ளிஷர்ஸ்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x