Published : 17 Nov 2018 08:41 AM
Last Updated : 17 Nov 2018 08:41 AM

நூல் நோக்கு: பர்மா: குறுக்குவெட்டுத் தோற்றம்

பர்மாவின் நெடிய வரலாற்றை விவரிக்கும் நூல். பர்மாவில் கொடிகட்டிப் பறந்த தமிழர்களின் வாழ்க்கை, அவர்களே பிற்காலத்தில் அகதிகளாய்த் தாய் மண்ணுக்குத் திரும்பும் துயரம் இந்த நூலில் பதிவுசெய்யப்பட்டுள்ளது. பர்மாவில் வாழ்ந்த தமிழர்களைப் பற்றியும் அவர்களின் தொன்மங்கள் பற்றியும்  விளக்குகிறது. பர்மா சென்று பல தரவுகளைச் சேகரித்திருப்பது நம்பகத்தன்மைக்கு வலுசேர்த்திருக்கிறது. ‘பர்மிய நாட்டின் மீதும் அதன் மக்கள் மீதும் நான் பற்றுதல் கொண்டவன். இந்தியா பெற்றெடுத்த புத்தர் பெருமான்தான் உங்களுக்கு உபதேசம் செய்தவர். சாதி, சமய பேதத்தை புத்தர் அறிய மாட்டார். உங்கள் நாடு ரத்தம் சிந்தாமல் விடுதலை பெற வேண்டுமெனக் கோருகிறேன்’ என்று பர்மியர்களுக்கு காந்தி எழுதிய கடிதம் இந்நூலில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

- மானா பாஸ்கரன்

பர்மாவும் தமிழர்களும்

மாத்தளை சோமு

தமிழ்க் குரல் பதிப்பகம்

திருவல்லிக்கேணி, சென்னை - 5.

விலை: ரூ.180

 7010475767

சொற்களால் ஒரு நினைவுத்தடம்

ந.ஜெயபாஸ்கரனின் சமீபத்திய கவிதைத் தொகுப்பான ‘பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்’, ஆலவாய் நகர் என்னும் மதுரையின் ஆவணமாகத் திகழ்கிறது. மதுரையின் வீதிகளில் பன்னெடுங்காலம் அலைந்துதிரிந்த ஜெயபாஸ்கரன் வேறொரு புதிய கோணத்தில் தன் ஊரைப் பார்க்கிறார். தொன்மும் புராணமும் இவரது கவிதைகளில் ஊடுபாவாகக் கலந்திருக்கின்றன. நிகழ்காலத்துக்கும் புராண காலத்துக்கும் சடுதியில் தாவுகிறார். ‘வெண்கலப்பாத்திரப் பளபளப்பு’ கொண்ட சொற்களைக் கொண்டு தனக்கே உரித்தான தன்மையுடன் கவிதைகளைப் பின்னியிருக்கிறார் ஜெயபாஸ்கரன்.

- எஸ்.ரமேஷ்

பிற்பகல் பொழுதுகளின் உலோக மஞ்சள்

ந.ஜெயபாஸ்கரன்

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629001.

விலை: 100

 9677778863

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x