Published : 17 Nov 2018 08:40 AM
Last Updated : 17 Nov 2018 08:40 AM

பரணிவாசம்: ராஜவல்லிபுரத்தின் குரல்

பரணியின் பூரண அழகை ரசிக்க வேண்டுமென்றால் நெல்லையிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் ராஜவல்லிபுரம் போக வேண்டும். இரண்டு சாகித்ய அகாடமி விருதாளர்களைத் தந்த சின்ன கிராமம். போகும் வழியெங்கும் வயதான ஆச்சியைப் போல மருத மரங்கள். எழுத்தாளர் வல்லிக்கண்ணனுக்கு எளிமையான ஒரு கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. ஊர் அடங்கியிருந்தது. வல்லிக்கண்ணன் படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிறகு (அவரது நினைவுநாள் நவம்பர் 9, பிறந்தநாள் நவம்பர் 12) கூட்டம் ஆரம்பித்தது. ‘பெரிய மனுஷி’, ‘காளவாசல்’ கதைகள் பற்றி வண்ணதாசன் பேசினார். அவரும், வண்ணநிலவனும் பஸ் ஏறி ராஜவல்லிபுரம் வந்து வல்லிக்கண்ணனைச் சந்தித்த பழைய நாட்களை நினைவுகூர்ந்தார். அந்த மூன்று மணிநேரமும் வல்லிக்கண்ணன் எங்களோடு இருந்தார்!

- இரா.நாறும்பூநாதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x