Last Updated : 10 Nov, 2018 08:25 AM

 

Published : 10 Nov 2018 08:25 AM
Last Updated : 10 Nov 2018 08:25 AM

பிறமொழி நூலகம்: எழுத்தில் வடித்த போர்க் காயங்கள்

தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் தேவையில்லாத அ.முத்துலிங்கத்தின் 19 சிறுகதைகள் பத்மா நாராயணன் மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளன. இந்தக் கதைகள் வெவ்வேறு களங்களைக் கொண்டவையாக இருந்தபோதிலும் அவற்றிடையே ஊடுபாவாக வெளிப்படுவது ஈழ மண்ணின் தாகமும் துயரங்களும். போரின் பின்விளைவுகளாக உருவாகும் மனச்சிதைவுகளுக்கு மேலாக எழுந்து பெயருக்காகவாவது புன்னகைத்து, உறவு சொல்லி வாழ்ந்துகொண்டிருக்கும் ஈழத் தமிழர்களின் மெல்லிய உணர்வுகளைத் தூவிவிட்டுப்போகும் முத்துலிங்கத்தின் எழுத்து இதுவரை தமிழ் வாசகர்களைக் கட்டிப்போட்டுவந்தது. இப்போது இந்தக் கதைகள் உலக அளவில் கவனம் பெறவிருக்கின்றன. வாழும் காலத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தபோதிலும் காலத்தைக் கடந்த படைப்புகள் வரிசையில் நிற்கும் ஒரு தொகுப்பு இது.

ஆஃப்டர் யெஸ்டர்டே அண்ட் அதர் ஸ்டோரீஸ்

அ.முத்துலிங்கம்

ஆங்கிலத்தில்: பத்மா நாராயணன்

ரத்னா புக்ஸ்

டெல்லி - 110 009.

விலை: ரூ.299

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x