Published : 03 Nov 2018 09:44 AM
Last Updated : 03 Nov 2018 09:44 AM

பிறமொழி நூலகம்: கேள்விக்குறியாகும் எதிர்காலம்

மனித இனத்தின் பரிணாம வளர்ச்சியைத் தனது சேபியன்ஸ் நூலில் சுவைபட விளக்கியிருந்தார் வரலாற்று அறிஞர் யுவால் நோவா ஹராரி. அவரது இந்த இரண்டாவது நூலில் இன்றைய மனித இனம் மறைந்துபோகக் கூடிய வாய்ப்புகளை எடுத்துக்கூறுகிறார். இந்நூற்றாண்டில் தலையெடுத்துள்ள தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் அதன் மையமாக அமையும் தனிநபர் புள்ளிவிவரங்களும் எவ்வாறு மனித இனத்தின் எதிர்காலத்துக்குக் கேள்விக்குறியாக மாறக்கூடும் என்பதையும் கடந்த 70,000 ஆண்டுகளில் ஹோமோ சேபியன்ஸ் எனப்படும் இன்றைய மனித இனம் படிப்படியாகத் தன்னுள் வளர்த்தெடுத்து வந்த மாண்புகளை அவை எவ்வாறு செல்லாக்காசாக மாற்றக் கூடும் என்பதையும் கூகுள், முகநூல் போன்ற பேரலைகளின் வீச்சை முன்னுதாரணமாகக் கொண்டு முன்வைக்கிறார். இந்நூலில் அவர் எழுப்பியுள்ள வினாக்கள் ஆழ்ந்த பொருள் பொதிந்தவை.

- வீ.பா.கணேசன்

ஹோமோ டூஸ்:

எ ப்ரீஃப் ஹிஸ்டரி ஆஃப் டுமாரோ

யுவால் நோவா ஹராரி

விண்டேஜ் – பெங்க்வின் ராண்டம் ஹவுஸ்

விலை: ரூ.499

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x