Published : 18 Oct 2018 10:54 AM
Last Updated : 18 Oct 2018 10:54 AM

நாடக உலா: ஐந்தில் மூன்று பழுதில்லை!

தமிழ் நாடக மேடையில் புதிய குழு இனிதே உதயமாகிவிட்டது. பன்முகப் படைப் பாளி மறைந்த கோமல் சுவாமிநாதனின் நினைவாக அவரது மகள் தாரிணி கோமல் ‘கோமல் தியேட்டர்' என்ற பெயரில் தொடங்கி யுள்ள குழு இது. நாரத கான சபாவில் நடந்த அரங்கம் நிரம்பிய விழாவில் நடிகர் சத்ய ராஜ், இக்குழுவைத் தொடங்கி வைத்தார். அந்த நாளில் கோமல் மூலமாக நாடக மேடைக்கு அறிமுகமான சத்யராஜ், அவரது 3 நாடகங்களில் நடித்தவர். தான் முதலில் நடித்த நாடகத்தில் கோமலிடம் சத்யராஜ் பெற்ற சம்பளம் 10 ரூபாய்!

புதுக்குழுவின் முதல்முயற்சியாக ‘இவர் கள் சிறுகதைகள் இவர்களின் இயக்கத்தில்' என்ற தலைப்பில் 5 குறுநாடகங்கள் மேடை யேறின. ஒவ்வொரு நாடகமும் 20 மணித் துளிகள்தான். ஜெயகாந்தனின் (லவ் பண் ணுங்கோ சார்), ஆர்.சூடாமணியின் (பிம்பம்), கல்கியின் (எஜமான விசுவாசம்), புதுமைப் பித்தனின் (கட்டில் பேசுகிறது), தி.ஜானகிராம னின் (விளையாட்டு பொம்மை) என்று அன் றைய எழுத்துலக சிம்மங்களின் 5 சிறுகதை களுக்கு நாடக வடிவம் கொடுத்திருந்தார்கள். இளங்கோ குமணன் 2 நாடகங்களுக்கும், தாரிணி கோமல், கவுரிசங்கர், கார்த்திக் கவுரிசங்கர் முறையே ஒவ்வொரு கதையை யும் நாடகமாக்கி இயக்கும் பொறுப்பு. இவர் கள் நால்வரும் வருங்காலத்தில் டைரக் ஷன் துறையில் சிம்மங்களாக வளர்ந்து உறும வாழ்த்துவோம்!

ஐந்து நாடகங்களில் அதிகம் கவர்ந்தது ‘பிம்பம்’, ‘நான் நானாகவே இருக்க வேண் டும்' என்று பெண்கள் சார்பில் வாதிடும் நாடகம். முதலில், இவராகவும் அவராகவும் பிரபலங்களின் பட்டியலில் இணைய வேண்டும் என்று கற்பனையில் மிதக்கும் மீனாட்சி, மணமானபின் வேலைக்குப் போகக்கூடாது, மூக்குக் குத்திக் கொள்ள வேண்டும் என்பது மாதிரியான வருங்கால புருஷனின் கண்டிஷன்களை முதலில் ஏற்க மறுப்பதும், பின்னர் ஒப்புக்கொள்வதுமான தடுமாற்றப் பெண். ஆனால் அவளுடைய அப்பாவின் மிரட்டலால் அடங்கிப்போகும் அம்மாவின் பிம்பம் தனக்கும் வேண்டா மென்று ‘நான் நானாக இருக்க' அவள் முடிவெடுக்கிறாள். இதில் தாரிணி கோமல் அம்மாவாகவும், மகளாக லாவண்யா வேணுகோபாலும் நடிப்பில் மின்னினார்கள்.

“கோமலின் நாடகங்களில் நடிக்க அந்த நாட்களில் எனக்கு சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இப்போது அவரது பெயர்கொண்ட ஒரு குழுவில் நடிப்பதில் எனக்கு மனநிறைவு" என்று சொல்லிவிட்டு உள்ளே நுழைந்தவர் காத்தாடி ராமமூர்த்தி.

டைமிங் காமெடியில் சிரிக்க வைக்கும் காத்தாடி தி.ஜானகிராமனின் ‘விளையாட்டுப் பொம்மை' நாடகத்தில் குணச்சித்திர வேடத் தில் சிலிர்க்க வைத்தார். மறதியால் தாக்கப் பட்ட பாத்திரம். நடை, உடை, உடல்மொழி, வச னம் பேசுவதில் இயல்பு என்று அத்தனை யிலும் பிய்த்து உதறுகிறார் காத்தாடி.

தன் எழுத்துகளில் உணர்வுகளை ஆழ மாகப் பதியவைத்தவர் தி.ஜானகிராமன். ‘விளையாட்டுப் பொம்மை'யில் அந்த உணர்வுகளே பிரதானம்.

புதுமைப்பித்தன் எழுதிய ‘கட்டில் பேசு கிறது' சிறுகதை, நாடக வடிவம் பெற்றிருக் கிறது. இதிலும் கட்டில் உயிர்பெற்று வந்து பேசும் புரிந்தும் புரியாத வசனங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு, மருத்துவமனைக் கட்டிலில் வயிற்றுவலியால் துடிக்கும் நோயாளியாக சீனிவாசன் தன் அசத்தலான நடிப்பால் மிரட்டுகிறார்.

கல்கியின் ‘எஜமான விசுவாசம்' கதைக் குப் பதிலாக மேடைக்கு தோதுபடும் வேறொரு கதையை எடுத்துக் கொண்டிருக்கலாம்.

சூத்திரதாரி மாதிரியாகவும், கதைச் சொல்லி மாதிரியாகவும் ஒருவர் நடுநடுவே வந்து கதை நகர்தலுக்கு காரணமாக இருப்பதும், முடிவில் ‘இதை எழுதியதே நான்தானே' என்று நாடகத்தை முடிப்பதும் கொடுப்பது பூஜ்யம் எபெக்ட். கல்கியே ஒரு பாத்திரமாக வந்து பேசுவதாக எடுத்துக் கொள்ள வேண்டுமா? ஸாரி, டைரக்டர் சார்!

இதில் ராக்காவலாளி பாத்திரத்துக்கு வீராச்சாமி என்று பெயர் அமைத்திருப்பது சாலப் பொருந்துகிறது. நிஜத்தில், கோமல் சுவாமிநாதனுக்கு மிகவும் பிடித்த நடிகர் மறைந்த வீராச்சாமி! காவலாளியின் மகளாக நடிக்கும் ஸ்வேதாவுக்குச் சுற்றிப்போட வேண்டியது அவசியம். அத்தனை இயல்பு.

ஐந்துக்கு ஆரம்பம், ஜெயகாந்தனின் ‘லவ் பண்ணுங்க சார்' சிறுகதை. இதில் பெரியவர் ஒருவர் பேசிக்கொண்டும், கண் கலங்கிக்கொண்டும் இருப்பார். மௌனமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் இளைஞர் கடைசியில் அழுதுவிடுவார். ‘பெற்றோர் உங்கள் மீது வைத்திருக்கும் அன்பையும் பாசத்தையும் நினைவில் வைத்து நீங்க லவ் பண்ணுங்க சார்' என்று அறிவுறுத்தும் ஜே.கே ஸ்டைல் கதை.

பெரியவராக இளங்கோ குமணன். பாலக்காடு பிராமணர். சிறு ஓட்டலுக்கு முதலாளி. தன் மகள் வேறு ஜாதி இளைஞ னைக் காதலித்து, அவனுடன் வீட்டைவிட்டு ஓடிவிடுவதும், அதனால் பெற்றவருக்கு ஏற்படும் மனவேதனைகளும் ஒன் லைன். குமணன் முழு நாடகத்தையும் தன் தோள்களில் சுமக்கிறார் - அங்கங்கே நடிப்பில் மிகை வெளிப்பட்டாலும்!

ஐபிஎல் போட்டிக்கு ஆட்டக்காரர்களைத் தேர்வுசெய்வது மாதிரி, வெவ்வேறு நாடகக் குழுக்களிலில் இருந்து நட்சத்திரங்களைத் தேர்வு செய்து 5 நாடகங்களில் நடிக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் தாரிணி. கோமல் தியேட்டர் வெற்றிகரமாகப் பயணிக்க தனக்கென்று பிரத்தியேகமாக ஒரு குழுவை அமைத்துக்கொள்ள வேண் டும். கடன் அன்பை முறிக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x