Published : 13 Oct 2018 08:28 AM
Last Updated : 13 Oct 2018 08:28 AM

‘எழுத்தாளர் அசோகமித்திரன்’ விவரணப் படம் சிங்கப்பூரில் இன்று திரையிடப்படுகிறது

‘எழுத்தாளர் அசோகமித்திரன்’ என்ற பெயரில் இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி உருவாக் கியுள்ள விவரணப் படம், சிங்கப் பூரில் இன்று (13-ம் தேதி) திரை யிடப்படுகிறது.

நவீனத் தமிழ் இலக்கியத்தின் மாபெரும் ஆளுமைகளில் ஒருவர் மறைந்த அசோகமித்திரன். இவரைப் பற்றி ‘எழுத்தாளர் அசோக மித்திரன்’ என்ற பெயரில் ஆவ ணப் பட இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி விவரணப் படம் (டாகுமென்டரி) உருவாக்கியுள் ளார்.

இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சி உட்பட சில இடங்களில் திரையிடப்பட்டு அசோகமித்திரனின் வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் இந்தப் படம் பெரும் பாராட்டுகளைப் பெற்றது. இந்த விவரணப் படம் சிங்கப்பூரில் இன்று (13-ம் தேதி) திரையிடப்பட இருக்கிறது.

அனுமதி இலவசம்

சிங்கப்பூர் தெற்காசிய திரைப் பட விழாக் குழுவினர் அழைப் பின் பேரில் சிங்கப்பூர் தேசிய நூலகத்தின் தமிழ்த் துறையில் இன்று மாலை 6 மணிக்கு ‘எழுத்தாளர் அசோகமித் திரன்’ விவரணப் படத்தின் திரையிடல் நடைபெறுகிறது.

இதைத் தொடர்ந்து, இயக்குநர் ப்ரஸன்னா ராமஸ்வாமி பங்கேற் கும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. இந்தக் கலந்துரை யாடலை, பிரபல ஊடக ஆளுமை யான முகமது அலி ஒருங்கிணைக் கிறார். இந்த நிகழ்ச்சிக்கான அனுமதி முற்றிலும் இலவசம்.

‘எழுத்தாளர் அசோகமித்திரன்’ விவரணப் படத்தில் அவரது எழுத்துகள் பற்றிய அவருடனான தனிப்பட்ட உரையாடல்கள், மற்ற எழுத்தாளர்கள், திரைப்பட, நாடகக் கலைஞர்கள், விமர்சகர்கள் ஆகி யோரின் கருத்துகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இவற்றைத் தாண்டி, இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் அவருடன் நிகழ்த் திய கலந்துரையாடல், அதிலும் வெளிப்படும் அவரது அங்கதம் ஆகியவை கச்சிதமாகப் படம் பிடிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, அசோகமித்திரன் ஹைதராபாத்தில் படித்த பள்ளி, அவர் வாழ்ந்த திருவல்லிக்கேணி மசூதிகளைச் சுற்றிய பகுதி, தனது கடைசி காலத்தில் அவர் தங்கியிருந்த வேளச்சேரி வீடு ஆகியவையும் பதிவாகியுள்ளன.

சிங்கப்பூரில் இன்று திரையிடல் நடைபெறும் இடத்தின் முகவரி: ஓபன் ஸ்டேஜ் நூலகம், எஸ்பிள னேடு, 8, ரஃபேல்ஸ் அவென்யூ, #03-01, சிங்கப்பூர் 039802. இதுபற்றிய மேலும் விவரங்களுக்கு +65 86201957 என்ற தொலைபேசி எண் அல்லது shweta@sgsaiff.com என்ற மின்னஞ்சல் முகவரியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x