Published : 15 Sep 2018 09:02 AM
Last Updated : 15 Sep 2018 09:02 AM

பிறமொழி நூலகம்: வாழ்க்கையே தத்துவமாக…

அடுத்த தலைமுறையினருக்குத் தன் வாழ்க்கையையே பாடமாக விட்டுச்சென்றவர் மகாத்மா காந்தி.  வாழ்வதற்கான அவசியத்தை, அதற்கு மதிப்பூட்டுவதன் அவசியத்தை, மனிதகுலத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தபோதும் அவர்கள் அனைவரின் நலனுக்காகப் பாடுபடுவதன் அவசியத்தை வாழ்ந்து காட்டியவர் என்பதே திறந்த புத்தகமாக இருந்த அவரது வாழ்வின் சாரம். அத்தகைய மாமனிதருடன் பேசிப் பழகியவர்கள் காந்தியின் வாழ்க்கைக் குறிக்கோள் பற்றி தாங்கள் புரிந்துகொண்டதை எழுதிய நூல் இது. எஸ்.ராதாகிருஷ்ணன், கமலாதேவி சட்டோபாத்யாயா, காகாசாஹேப் கலேல்கர், ஜே.பி.கிருபளானி, ஆர்.ஆர்.திவாகர், ஹுமாயூன் கபீர், நிர்மல் குமார் போஸ் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் எழுதியிருக்கிறார்கள். மைய அரசின் பதிப்பகப் பிரிவு இதன் தமிழாக்கத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

- வீ.பா.கணேசன்

மகாத்மா காந்தி அண்ட் ஒன் வேர்ல்ட்

பப்ளிகேஷன் டிவிஷன்

ராஜாஜி பவன், பெசண்ட் நகர்

சென்னை - 90.

விலை: ரூ.30

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x