Published : 15 Sep 2018 09:00 AM
Last Updated : 15 Sep 2018 09:00 AM

தொடுகறி: ‘பெண் ஏன் அடிமையானாள்’ @ரூ.10

‘பெண் ஏன் அடிமையானாள்’ @ரூ.10

சுயமரியாதை, பெண்விடுதலை, சமத்துவம், சமூகநீதிக்காகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை 10 ரூபாய்க்குக் கொண்டுவந்திருக்கிறார்கள் நன்செய் பிரசுரம். ஒரு லட்சம் பேரிடம் கொண்டுசேர்க்கத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

தொடர்புக்கு: 97893 81010

‘நல்லி-திசை எட்டும்’ மொழியாக்க விருதுகள்

ஜி.எஸ்.ஐயர், க.பூரணசந்திரன், அ.சு.இளங்கோவன், அக்களூர் ரவி, இராம.குருநாதன், சே.நல்லதம்பி, எம்.எஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான நல்லி திசைஎட்டும் மொழியாக்க விருதுகள் பெறுகிறார்கள். கோவை பூசாகோஅர கிருஷ்ணம்மாள் கல்லூரியில் செப்டம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

பிரம்மாண்ட விருதுத் திருவிழா

இலக்கியம் மற்றும் சமூகச் செயல்பாட்டாளர்கள் 15 பேருக்கு விருது வழங்கிக் கௌரவிக்கிறது நெருஞ்சி இலக்கிய இயக்கம். தஞ்சை ப்ரகாஷ் விருதை சி.எம்.முத்துவும், கரு.அழ.நாகராஜன் விருதை கீரனூர் ஜாகிர் ராஜாவும் பெறுகிறார்கள். கலாப்ரியா, இளஞ்சேரல், கு.விஜயகுமார், புலியூர் முருகேசன், நா.விச்வநாதன், தஞ்சாவூர்க் கவிராயர், அம்சப்ரியா, ஷாராஜ், கு.இலக்கியன், சக்தி ஜோதி, கவின்மலர், அகிலா, தமிழ்மகன் ஆகியோரும் விருது பெறுகிறார்கள். தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரிச் சாலையிலுள்ள தென்னகப் பண்பாட்டு மையத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறும்.

ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது

பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் உரைநடைக் கவிதையின் மொழிபெயர்ப்புக்காக (‘நரகத்தில் ஒரு பருவகாலம்’ - எதிர் வெளியீடு) கார்த்திகைப் பாண்டியனுக்கும், தற்கால அமெரிக்காவின் பெண், ஆண், திருநங்கை உள்ளிட்ட 16 கவிஞர்களின் மொழிபெயர்ப்புக்காக (‘எண்: 7 போல் வளைபவர்கள்’ - சால்ட் பதிப்பகம்) அனுராதா ஆனந்த்க்கும் 2018-ம்

ஆண்டுக்கான கவிஞர் ஆத்மாநாம் மொழிபெயர்ப்பு விருது கிடைத்திருக்கிறது.

தொகுப்பு: மு.முருகேஷ், த.ராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x