Last Updated : 25 Aug, 2018 09:24 AM

 

Published : 25 Aug 2018 09:24 AM
Last Updated : 25 Aug 2018 09:24 AM

பிறமொழி நூலகம்: போற்றத்தக்க ஆளுமைகள்

நமக்கு மறதி அதிகமாகிவிட்டது. இல்லையெனில், இரண்டு தலைமுறைக்கு உள்ளாகவே அனைத்தையும் மறந்து, கடந்துவந்த பாதையை மறந்து, போற்ற வேண்டியவர்களை மறந்து, தூற்ற வேண்டியவர்களைப் போற்றுவோமா என்ன? நமது இன்றைய நிலையை நினைவுபடுத்த வந்துள்ளது இந்நூல். நாட்டின் அடிமை விலங்கொடிக்கப் போராடிய லட்சக்கணக்கானோரில் விரல்விட்டு எண்ணத்தக்க விடுதலைப் போராட்ட வீரர்கள் தாங்கள் யாருக்காக, எதற்காகப் போராடினோம் என்று எழுதிவைத்த கடிதங்களின் தொகுப்பாக வெளிவந்த இந்நூல், நாம் கடந்துவந்த பாதையை நினைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. 1857-ல் தொடங்கிய இந்தியாவின் முதல் விடுதலைப் போரின் நாயகியான ராணி லஷ்மிபாய் முதல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வரை இந்நூலில் பதிவாகியுள்ள தனி முத்திரை பதித்தவரின் கடிதங்கள் நம்மைக் கூனிக் குறுக வைக்கின்றன.

ரிமெம்பர் அஸ் ஒன்ஸ் இன் எ வைல்

லெட்டர்ஸ் ஆஃப் மார்ட்டியர்ஸ்

டி.என்.சதுர்வேதி பப்ளிகேஷன்ஸ் டிவிஷன்,

ராஜாஜி பவன், பெசண்ட் நகர், சென்னை - 90.

விலை: ரூ.130

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x