Published : 14 Jul 2018 08:57 AM
Last Updated : 14 Jul 2018 08:57 AM

நூல் நோக்கு: மனிதநேயக் கண்ணோட்டம்

யர் நீதிமன்றங்களிலும் உச்ச நீதிமன்றங் களிலும் நீதியரசர்களாகப் பணியாற்றியவர்களில் பலர் ஓய்வுபெற்றதும் தங்களுடைய கடமை முடிந்தது என்று இல்லாமல், அதே சமூக அக்கறையுடன் மனித உரிமைகள் செயல்பாட்டாளர்களாகவும் அரசியல் சட்டத்தின் தொடர் காவலர்களாகவும் செயல்பட்டுவருகின்றனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் வகுத்த இந்தப் பாட்டையில் பயணிக்கும் நீதியரசர்கள் வி.எம்.தார்குண்டே, மார்கண்டேய கட்ஜு, வள்ளிநாயகம், சந்துரு, பிரபா ஸ்ரீதேவன், ஹரிபரந்தாமன் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களுடைய உரைகளும் கட்டுரைகளும் மக்களுக்கு அவர்களுடைய உரிமைகளையும் பொறுப்புகளையும் உணர்த்தும் வழிகாட்டிகள். நீதியரசி பிரபா ஸ்ரீதேவன் சமூக நோக்கில் ஆங்கிலம், தமிழ் பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகள், கூட்டங்களில் நிகழ்த்திய உரைகள் ஆகியவற்றில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தெளிவான, செறிவான மொழிபெயர்ப்பு. பொருத்த மான மேற்கோள்கள். சகோதரத்துவம், சமத்துவம், மூன்றாம் பாலினத்தவருக்கான கௌரவம், பெண்களுக்கான உரிமைகள் என்று பல்வேறு அம்சங்களை மனிதநேயத்துடன் அணுகியிருக்கிறார் பிரபா. செய்தியாகப் படிக்கும்போது மனதில் உறைக்கத் தவறும் மனித உணர்வற்ற சில செயல்களை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது இந்நூல். நீதித் துறை யிலேயே ஆணாதிக்கப் பார்வை எப்படி இருக்கிறது என்பதையும் நன்றாக விவரித்திருக்கிறார்.

- ஆர்.என்.சர்மா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x