Published : 23 Jun 2018 09:43 AM
Last Updated : 23 Jun 2018 09:43 AM

நல்வரவு: ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது

முன்பே 5 கவிதை நூல்களை வெளியிட்டு கவிஞராக அறியப்பட்ட உமா மோகனின் முதல் சிறுகதைத் தொகுப்பு. “பாடுகளும், பயணங்களும் சொல்லித் தீரா சமூகத்தில் பிறந்திருக்கிறோம். உணர்வுகளின் ஆதிக்கமே நம் வாழ்வு. கேட்ட, பார்த்த தருணங்களை எழுத்தில் பதியும் முயற்சிகள்தான் என் கதைகள்” என்று சொல்லும் எழுத்தாளரின் சமகால சமூகத்தைப் பதிவுசெய்யும் 12 கதைகள் நூலில் உள்ளன. குடும்பச் சூழலில் பெண்கள் எதிர்கொள்ளும் சமூகமும், பெண்களைச் சமூகம் எவ்விதம் நடத்துகிறது என்பதும்தான் கதைகளின் மைய நீரோட்டமாக அமைந்துள்ளது.

ராஜகுமாரி வீடு வழியில் இருந்தது

உமா மோகன்

டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை - 600 078

விலை: ரூ. 100, 87545 07070

மனித உரிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நதிகள் இணைப்பு, விவசாயிகள் பிரச்சினை என தொடர்ந்து செயல்பட்டுவரும் வழக்கறிஞர் கே.எஸ்.இராதா கிருஷ்ணனின் புதிய நூல் ‘அழகர் அணை’. அழகர் அணை திட்டம் குறித்த மனு, கள ஆய்வு, எதிர்வினைகள் என இந்நூல் வெளிவந்திருக்கிறது. அழகர் அணை திட்டத்தின் மூலம் பயன்பெறும் ஏரிகள், குளங்களின் மிக நீண்ட பட்டியலையும் இணைத்திருப்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அழகர் அணை

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

கலைஞன் பதிப்பகம்

சென்னை - 600 017

விலை: ரூ. 100 044 24345641

பெண்ணடிமைத்தனத்துக்கு எதிராகக் குரல்கொடுப்பவர் பாரதி சின்னசாமி. அரசாங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விவசாய நிலங்கள் வழங்குவதன் மூலம், பெரும் மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்ற நம்பிக்கையை விதைக்கிறார். பெண் மையமாகவும் ஆண் சார்பாகவும் மாறி, மீண்டும் பெண்வழிச் சமுதாயத்தின் பிறப்புக்கு வித்திடுவதன் மூலம் ஒரு பொதுவுடைமைச் சமுதாய உருவாக்கத்துக்கான வேட்கையாக இந்நூல் இருக்கிறது.

கணம் குடும்பம் சுய உதவிக் குழு

பாரதி சின்னசாமி

எழில்மதி பதிப்பகம்

தொப்பம்பட்டி, கோயம்புத்தூர் - 641 017

விலை: ரூ. 100, 93453 77840

ஆசிரிய முகமூடியைக் கழட்டி வைத்து, பள்ளியில் மாணவர்களின் அருகமர்ந்து மாணவத் தோழனாகப் பழகும் பட்டதாரி ஆசிரியர் ஒருவரின் அனுபவத் துளிகள். 15 கட்டுரைகளின் வழியே ஆசிரியர்–மாணவர்–பெற்றோர் என முத்தரப்பினரின் சிந்தனைக்கும் கவனத்துக்குமான பல்வேறு சிந்தனைகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. ஆண்-பெண் நட்பில் என்ன தப்பு?, நம்மை அறிவோம் நம்மை ஆள்வோம், கனவு மெய்ப்பட வேண்டும் ஆகிய தலைப்பிலான கட்டுரைகள் கவனிக்கத்தக்கன.

என் இனிய மாணவச் செல்வங்களே…

சீதைமைந்தன்

வாசகன் பதிப்பகம், சேலம் - 636 007

விலை: ரூ.100, 98429 74697

தொகுப்பு: மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x