Published : 23 Jun 2018 09:05 AM
Last Updated : 23 Jun 2018 09:05 AM

சிற்றிதழ் பார்வை: கவிதைக்கான படுகை!

முழுக்கவும் கவிதைக்கான தளமாக வந்திருக்கும் காலாண்டிதழ் இது. முதல் இதழே சி.மணிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருப்பதிலிருந்து இதழின் தன்மை புலப்படும். மந்திரபு ஹைமாவதி, எலிசபெத் குரியன் மோனா, சிக்மா, பத்மஜா அய்யங்கார் ஆகியோரது கவிதைகளை மதுமிதா சிறப்புடன் மொழிபெயர்த்திருப்பதும், ஆத்மாநாமைச் சந்தித்து பிரம்மராஜன் எடுத்த பேட்டியை மறுபிரசுரம் செய்திருப்பதும் இந்த இதழின் சிறப்பம்சங்கள். ‘சொற்கள்’ ஆசிரியர் கே.சி.செந்தில் குமாருக்கு வாழ்த்துகள்.

- மானா.பாஸ்கரன்

சொற்கள் (காலாண்டிதழ்)

12- டி. 2-வது அக்ரஹாரம்,

சேலம் - 636 001.

விலை ரூ: 50

95666 51567

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x