Published : 07 Feb 2017 10:22 AM
Last Updated : 07 Feb 2017 10:22 AM

கடவுளின் நாக்கு 31: உதவிக் குரல்!

இரண்டு நாட்களுக்கு முன்பாக கர்நாடகாவில் ஒரு சாலை விபத்தில் காவல்துறை அதிகாரி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில், அங்கு கூடிய பொதுமக்கள் அவரை காப்பாற்றுவதற்கு பதிலாக செல்போனில் போட்டோ எடுப்பதற்கு போட்டி போட்டார்கள். சம்பவ இடத்திலேயே அவர் உயிர் பிரிந்தார் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்தேன்.

ஒரு மனிதன் சாலை விபத்தில் உயிருக்குப் போராடும்போது எப்படி இத்தனை பேருக்கு போட்டோ எடுக்க மனம் வந்தது? உயிரின் மதிப்பு இவ்வளவுதானா? சாலை விபத்தோ, திருட்டோ, வன்முறையோ எது நடந்தாலும் உடனே புகைப்படம் எடுக்க செல்போன் கேமராவை வெளியே எடுக்கிறார்களே தவிர, கை கொடுத்து உதவிசெய்ய பலரும் முன்வருவதே இல்லை. எப்படி இந்த மோசமான மனநிலை உருவானது?

நம் காலத்தில் அந்தரங்கம் கடை விரிக்கப்படுகிறது. காட்சிப்படுத்தப்படு கிறது. அதை ரசிக்க பெரும் கூட்டம் காத்திருக்கிறது. கண்ணுக்குத் தெரியாத கேமரா ஒன்று நம்மை பின்தொடர்கிறது என்ற அச்சம் பெண்களை மிகவும் தொல்லைப்படுத்துகிறது. தங்கும் விடுதிகள், உணவகங்கள், பொது இடங்கள் என எங்கும் இந்த கேமராக் கள் தொடர்கின்றன. அறிந்தும் அறி யாமலும் இதில் மாட்டிக்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஆம்னி பேருந்து ஒன்றில் ஓர் இளம் பெண் தன்னை அறியாமல் சரிந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அவள் உறக்கத்தை யாரோ ஒருவன் முழுமை யாகப் படம் எடுத்து இணையத்தில் உலவவிடுகிறான். அதைப் பார்த்த சக ஊழியர்கள், மறுநாள் அலுவலகத்துக்கு வந்த அந்தப் பெண்ணிடம் எச்சரிக்கை செய்கிறார்கள். உடைந்துபோய் அந்தப் பெண் தற்கொலை முயற்சி செய்து, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டதாக சில மாதங்கள் முன்பு ஒரு செய்தி வெளியானது. உறங்கும்போது கூடவா பெண்களுக்குப் பிரச்சினை. என்ன உலகமிது?

பொருளாதாரக் குற்றங்களைவிடவும் இதுபோன்ற தொழில்நுட்ப வளர்ச்சி யால் உருவாகும் குற்றங்கள் அதிகமாகி விட்டன. இந்தக் குற்றங்களில் ஈடுபடும் பலர் இதை பொழுதுபோக்காகக் கருது கிறார்கள். இணையத்திலோ, செல் போனிலோ, பொதுவெளியிலோ ஆபாச மானப் புகைப்படங்களை, வசைகளைப் பகிர்ந்தால் தண்டிக்கப்படுவோம் என் கிற பயமே இல்லை.

ஒரு பக்கம் மனிதர்கள் அன்புக்காக ஏங்குகிறார்கள். இன்னொரு பக்கம் சகமனிதனை உதாசீனம் செய்து அவமதித்து விரட்டுகிறார்கள். இந்த முரணே... இன்றைய வாழ்க்கை. குறுக்குவழியில் பணம் சேர்ப்பதற்குப் போட்டியிடும் இவர்கள், மறுபக்கம் ‘உலகம் கெட்டுப்போய்விட்டது என்று கூச்சலும் இடுகிறார்கள்

முல்லா நசுருதீன் ஒருமுறை சந்தைக்குச் சென்றிருந்தார். அங்கே ஒரு வணிகர் ‘‘உங்களால் நூறு முட்டாள்களை ஒரே இடத்தில் ஒன்றுகூட்ட முடியுமா?’’ என முல்லாவிடம் கேட்டார்.

அதைக் கேட்ட முல்லா ‘‘இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. எளிதான வேலை!’’ என்றார். அதை செய்துகாட்டினால் நூறு தங்கக் காசுகள் தருவதாக வணிகர் சவால்விட்டார்.

உடனே முல்லா சந்தையின் நடுவில் நின்றபடியே ‘‘உழைக்காமல், சிரமப்படாமல் பணக்காரன் ஆவதற்கு ஆலோசனை சொல்லப் போகிறேன். யாருக்கு இந்த ஆலோசனை தேவையோ உடனே வாருங்கள்!’’ என்று உரக்கக் கூவினார். சந்தை முழுவதும் செய்தி வேகமாக பரவியது.

முல்லா சொல்லப்போகும் ஆலோ சனைக்காக பெருங்கூட்டம் கூடிவிட்டது. அப்போது, முல்லா தன்னோடு இருந்த வணிகரிடம் சொன்னார்: ‘‘நீங்கள் நூறு முட்டாளை ஒன்றுகூட்டும்படிதான் சொன் னீர்கள். இதோ பாருங்கள் பல நூறு முட்டாள்கள் கூடிவிட்டனர். இவர்களை எண்ணிக்கொள்ளுங்கள்!’’ என்றார்

அதை கேட்ட வணிகர் ’’இவர்கள் முட்டாள் என எப்படி நம்புவது?’’ எனக் கேட்டார்.

அதற்கு முல்லா பதில் சொன் னார்: ‘‘உழைக்காமலேயே, குறுக்கு வழியில் பெரும் பணக்காரனாக ஆசைப்படுகிறவர்கள் நிச்சயம் முட்டாள் கள்தான்!’’ என்ற சொல்லியபடியே தனக்கு உரிய நூறு தங்கக் காசுகளைப் பெற்றுக்கொண்டார் என முடிகிறது கதை. முல்லா வேடிக்கையாக செய்த செயல் என்றபோதும், அவர் சுட்டிக் காட்டும் உண்மை முக்கியமானது அல்லவா!

நாட்டுப்புறக் கதைகள் இதுபோன்ற மோசடி முயற்சிகளைக் கேலி செய்கின்றன. ஏமாற்றுக்காரன் எப்படி நடந்துகொள்வான் என அடையாளம் காட்டுகின்றன. அவ்வகையில் கதைகள் எச்சரிக்கை மணி போன்றவை.

உலகம் தன்னைக் கைவிட்டா லும் உறவுகள் தன்னைக் காப்பாற்றி விடுவார்கள் என பலரும் நம்பு கிறார்கள். ஆனால், நிஜத்தில் அப்படி நடப்பதில்லை. நம் காலத்தில் ரத்த உறவுகள் கைவிட்ட மனிதனை, நண்பர்கள் உதவிகள் செய்து காப்பாற்றிவிடுவதைக் காணமுடிகிறது. நண்பர்களை உருவாக்கிக்கொள்வதும். நட்பை பேணுவதுமே நம் காலத்தின் ஆதாரச் செயல்கள்!

இணையத்தில் வாசித்த நாட்டார் கதைகளில் ஒன்று உதவி செய்வதன் அவசியத்தை எடுத்துச் சொல்கிறது.

ஓர் ஊரில் ஒரு பெரிய அரச மரம் இருந்தது. அம்மரத்தின் அருகே ஒரு பள் ளம் இருந்தது. இலையுதிர் காலத்தில் மரத்தில் இருந்த இலைகள் பழுத்து கீழே விழ ஆரம்பித்தன. அப்போது மரம் பள்ளத்தைப் பார்த்துச் சொன்னது:

‘‘பாவம் இந்த இலைகள்! நீ இவை களையெல்லாம் ஏற்றுக்கொண்டு காப் பாற்று. இல்லாவிடில் அடிக்கும் காற்றில் இலைகள் எங்கே போகும் எனத் தெரியாது!’’

இதைக் கேட்ட பள்ளம் கோபமாக சொன்னது: ‘‘உதிர்ந்த இலைகளால் எனக்கு என்ன லாபம்? நான் ஏன் இலைகளுக்கு உதவி செய்ய வேண் டும்? இலைகளால் எனக்கு எந்தப் பயனும் இல்லாதபோது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது!’’

உதிர்ந்த இலைகள் எல்லாம் காற்றில் பறந்து எங்கோ குப்பையில் போய் விழுந்து மக்கிப் போயின.

சில மாதங்களுக்குப் பிறகு மழைக் காலம் ஆரம்பித்து, பெருமழை கொட்டத் தொடங்கியது. அப் போது பள்ளம் மரத்தைப் பார்த்துச் சொன்னது:

‘‘மரமே நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும். இலைகளை உதிர்த்து என்னை மூடிக் கொள். இல்லாவிடில் மழை நீர் என்னுள் நிரம்பி, என்னை மூழ்கடித்துவிடும். மேலும் மண்ணும் சரிந்து என்னை மூடிவிடும்!’’

பள்ளம் கேட்டுக்கொண்டதை மரம் கேட்காதது போலிருந்தது. உடனே ஆதங்கத்துடன் பள்ளம் சொன்னது: ‘‘நண்பனே! உன்னை விட்டால் எனக்கு வேறு துணையே இல்லை. எப்படி யாவது என்னைக் காப்பாற்று. மழை வேகமாகிக்கொண்டே போகிறது.

அதைக் கேட்ட அரசர மரம் சொன் னது: சுற்றியிருப்பவர்களுக்கு உதவி செய்ய மறுத்தாய். அதற்கான தண் டனையைதான் இப்போது அனுபவிக்க போகிறாய். உன் கஷ்டத்தை நீயே அனுபவி. என்னால் உனக்கு உதவி செய்ய முடியாது!’’

பள்ளத்தில் மழை நீர் தேங்கியது. மண் சரிந்து பள்ளத்தை மூடியது. முடிவில் பள்ளம் இருந்த இடம் தெரியாமலே மறைந்து போனது.

இது ஒரு எளிய கதை. ஆனால், முக் கியமான படிப்பினையைக் கற்றுதரும் கதை. கதைகளின் இயல்பே வாழ்க் கையை நெறிப்படுத்துவதுதானே! இந்த இரண்டு கதைகளும் அதையே செய்கின்றன.

இணையவாசல்: >தமிழகத்தில் சேகரிக்கப்பட்ட சில நாட்டுபுறக் கதைகளை வாசிக்க

- கதைகள் பேசும்… | எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x