Last Updated : 12 Mar, 2019 11:47 AM

 

Published : 12 Mar 2019 11:47 AM
Last Updated : 12 Mar 2019 11:47 AM

ஆங்கில​ம் அறிவோமே 254: கோழி கோழைத்தனமானதா?

கேட்டாரே ஒரு கேள்வி

‘M’ என்பது ஆயிரம் என்பதைக் குறிக்கிறது. அப்படியிருக்க 50,000 என்பதைக் குறிக்க 50K  என்கிறார்களே, இது தவறல்லவா?

*******************

 “சில வாக்கியங்களின் இறுதியில் “and what not’’ என்ற சொற்கள் இடம்பெறுகின்றன. இதற்கு என்ன பொருள் என்று விளக்குங்களேன்.”

“தோராயமாக மற்றும் அதுபோன்ற’’ என்று இதற்குப் பொருள்கொள்ளலாம்.

You can buy biscuits and what not at the shop என்றால் பிஸ்கெட்டுகள் மற்றும் அதுபோன்ற வேறு எதையும் கடையில் வாங்கிக்கொள்ளலாம் என்று பொருள்.

Tsunami can cause mental pain, frustration and what not என்றால் சுனாமி என்பது வலி, மன உளைச்சல் போன்ற பலவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒன்று என்று பொருள்.

White rabbits, chicken and ducks and what not can be seen in the park என்றால் முயல்கள், கோழிக்குஞ்சுகள், வாத்து மற்றும் இவற்றைப் போன்ற பல சிறு உயிரினங்களை அந்தப் பூங்காவில் காணலாம் என்று பொருள்.

english-2jpg“Infant, Toddler ஆகிய இரண்டும் கைக்குழந்தையைக் குறிக்கும் சொற்கள்தாமே?”

வாசகரே, ஒருவயதுக் குழந்தையை Infant  என்றும், ஒன்றிலிருந்து இரண்டு வயதிலுள்ள குழந்தையை Toddler என்றும் குறிப்பிடுகிறோம். Toddle என்றால் ‘தத்தக்கா பித்தக்கா’ என்று நடப்பது. இப்படி நடக்கும் பருவத்திலுள்ள குழந்தையை Toddler என்பார்கள்.

*******************

கேட்டாரே ஒரு கேள்வி நண்பரே, ரோமானிய எழுத்து முறையில் ‘I’ என்பது ஒன்று என்பதையும்,‘V’ என்பது ஐந்தையும்,‘X’ என்பது பத்தையும் குறிப்பது போல,‘M’  என்பது ஆயிரத்தைக் குறிக்கிறது.

ஆனால், 50K எனும்போது இங்கே ரோமானிய எழுத்து முறையை அவர்கள் பின்பற்றவில்லை.  மெட்ரிக் அளவையில் ‘K’ என்பது கிலோ என்பதைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் இது ஆயிரம் என்பதைக்  குறிக்கிறது.  எனவே, அந்த அர்த்தத்தில் 50K என்பதுபோல் பயன்படுத்துகிறார்கள். ஆனால், ஆயிரத்து ஒன்று என்பதைக் குறிக்க MI என்றுதான் எழுத வேண்டுமே தவிர, KI என்று எழுத முடியாது.

*******************

“Rash driving என்றால் வேகமாக வண்டியை  ஓட்டுதல்தானே?”

அது மட்டுமல்ல பொறுப்பற்ற முறையில் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவதையும் ‘rash’ என்ற சொல்லின் மூலம் வெளிப்படுத்துவார்கள். Don’tmake rash decisions.

*******************

“Patronize என்பது தேசபக்தி.  இது Patriotism தொடர்பானதா?”

அப்படியல்ல வாசகரே. ஒருவரை அனுதாபத்துடனும் அவருக்கு உதவும் வகையிலும் நாம் நடத்தினால் நாம் அவரை patronize செய்வதாகப் பொருள்.

Patron என்றால் ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அமைப்புக்கோ உதவுபவர் என்று பொருள்.  பெரும்பாலும் அது நிதியுதவியாக இருக்கும்.

Patriotism என்றால் தேசபக்தி. National pride என்றும் இதைக் குறிப்பிடலாம்.

சிப்ஸ்

# Dive என்பதன் past tense dived என்பதா, dove என்பதா?

இரண்டும்தான்! பிரிட்டனிலும், ஆஸ்திரேலியாவிலும் dived.  அமெரிக்காவிலும், கனடாவிலும் dove.

# Circle, sphere ஆகிய இரண்டும் ஒன்றா?

Circle  என்பது இரு பரிமாணம் கொண்டது - வட்டம். Sphere என்பது மூன்று பரிமாணம் கொண்டது - கோளம்.

# Chicken hearted fellow என்றால்?

கோழை

தொடர்புக்கு: aruncharanya@gmail.com | ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x