Last Updated : 15 Jan, 2019 10:06 AM

 

Published : 15 Jan 2019 10:06 AM
Last Updated : 15 Jan 2019 10:06 AM

இயர்புக் 2019: ஓர் அட்சய பாத்திரம்

பொதுவாக ஆங்கிலத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் விவரங்களை எல்லாம் தொகுத்து ‘இயர் புக்’  ஆக  வழங்கும்போது ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள்  அவற்றைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அவற்றில்  தமிழ்நாடு குறித்த செய்திகள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்குமே  தவிர, அதுவே முழுமையாக இடம்பெறுவது இல்லை.

அந்தப் புத்தகங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நடக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது  கடினம்.  இதனால் தமிழில் அதுபோன்ற  ‘இயர் புக்’ எப்போது வரும் என்று நான் ஏங்கியது உண்டு. அதைத் தீர்க்கும் வகையில் 768 பக்கங்களில்  தமிழகம் மட்டுமல்லாமல், இந்திய அளவிலும் சர்வதேச அரங்கிலும் நடந்த செய்திகளையும் முக்கிய நிகழ்வுகளையும் மிக  அழகாகப் படங்களுடன் தொகுத்து,  இயர் புக்கை இந்து தமிழ் நாளிதழ்  கொண்டுவந்துள்ளது.

இந்தப் புத்தகத்தை மாணவர்கள் படித்தால், பல்வேறு போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியும். தற்போது அரசுப் பணியை  போட்டித் தேர்வு மூலம் மட்டுமே பெறமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கிராம நிர்வாக அலுவலர் தொடங்கி இந்திய ஆட்சிப்பணி வரையிலான போட்டித் தேர்வுகளில் பெரும்பாலும் பொது அறிவு தொடர்பான கேள்விகளே இடம்பெறுகின்றன.

அந்தக் கேள்விகளுக்குச் சரியான விடையளித்து வெற்றிபெற  உதவும் அட்சய பாத்திரம் என்று இந்தப் புத்தகத்தைச் சொல்லலாம். இதை எல்லா மாணவர்களும் வாங்கிப் படிக்க வேண்டும். இந்தப் புத்தகத்தைத் தினமும் ஒரு மணி நேரம் வாசிப்பவர்கள் எந்த போட்டித் தேர்விலும் வெற்றிபெற முடியும்.

- இறையன்பு, ஐ.ஏ.எஸ்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய: https://www.kamadenu.in/publications

SMS வழியே முன்பதிவு செய்ய: Y19 Name Location Pincode ஐ type செய்து 9773001174 என்ற எண்ணுக்கு SMS அனுப்பவும். முன்கூட்டியே பதிவுசெய்தால் தபால் செலவு ரூ.40/- இலவசம் முந்துங்கள் தபால் சலுகை 10-01-2019 வரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x