Published : 12 Dec 2018 01:24 PM
Last Updated : 12 Dec 2018 01:24 PM

வேலை வேண்டுமா? - பரோடா வங்கிப் பணி

பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பதவியில் 913 காலியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. சட்டம், சொத்து மேலாண்மை ஆகிய பிரிவுகளில் இக்காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

தேவையான தகுதி

சட்ட அதிகாரிப் பணி: பி.எல். பட்டம்

முதுநிலைப் பிரிவு: வங்கி அல்லது பொதுத் துறை நிறுவனத்தில் 5 ஆண்டு சட்ட அலுவலர் பணி அனுபவம்

வயது வரம்பு:  28 முதல் 35 வரை.

இளநிலைப் பிரிவு:  3 ஆண்டு பணி அனுபவம்.

வயது வரம்பு: 25 முதல் 32 வரை.

முதுநிலைச் சொத்து மேலாண்மைப் பிரிவு: எம்.பி.ஏ. (மார்க்கெட்டிங்) பட்டம்  அல்லது பட்டப் படிப்புடன் வங்கி அல்லது நிதியில் ஓராண்டு கால டிப்ளமா அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம். அதோடு வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் விற்பனை அல்லது காப்பீடு அல்லது சொத்து விநியோகப் பிரிவில் 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 முதல் 35 வரை.

இளநிலைச் சொத்து மேலாண்மைப் பிரிவு:  ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு போதும். 2 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயது வரம்பு: 21 முதல் 30 வரை.

அனைத்துப் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு மத்திய அரசின் விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு முறை

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவர். முதுநிலைச் சிறப்பு அதிகாரிப் பணிக்கு ரூ.1 லட்சம், இளநிலைச் சிறப்பு அதிகாரிப் பணிக்கு ரூ.84 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்பும் உடையவர்கள் பரோடா வங்கியின் இணையதளத்தைப் (www.bankofbaroda.co.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை  வங்கியின் இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 26 டிசம்பர் 2018.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x