Published : 09 Oct 2018 11:37 AM
Last Updated : 09 Oct 2018 11:37 AM

வேலை வேண்டுமா: தமிழக அரசின் வழக்கறிஞர் பணி

தமிழக அரசின் குற்றத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர் நிலை-2 பதவிக்கான 46 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பைத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது.

வயது: எஸ்.சி., எஸ்.சி., (அருந்ததியர்), எஸ்.டி., எம்.பி.சி./ சீர்மரபினர், பி.சி., பி.சி. முஸ்லிம், கணவனை இழந்த பெண்கள் ஆகியோருக்கு வயது வரம்பில்லை. பிற பிரிவினர் 34 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பார் கவுன்சிலில் பதிவுசெய்த உறுப்பினராக இருக்க வேண்டும். தமிழறிவும் ஐந்து ஆண்டுகள் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்காடிய அனுபவமும் இருக்க வேண்டும்.

கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150, முதல் நிலைத் தேர்வுக் கட்டணம் ரூ.100. முதன்மைத் தேர்வுக் கட்டணம் ரூ.200. எஸ்.சி., எஸ்.சி. (அருந்ததியர்), எஸ்.டி. ஆகிய பிரிவினருக்கும் கணவனை இழந்தப் பெண்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் கட்டணமில்லை.

விண்ணப்பிக்க: உரிய தகுதியுடைய விண்ணப்பதாரர் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்னும் இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2018. முதல் நிலைத் தேர்வு நாள்: 05.01.2019. முதன்மைத் தேர்வு நாள்: பின்னர் அறிவிக்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/pDTT4S

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x