Published : 18 Sep 2018 10:32 AM
Last Updated : 18 Sep 2018 10:32 AM

வேலை வேண்டுமா? - விஜயா வங்கிப் பணி

பொதுத் துறை வங்கியான விஜயா வங்கியின் கடன் பிரிவில் மேலாளர் பதவிக்கான [Probationary Asst. Manager (Credit)] 330 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை அந்த வங்கி வெளியிட்டிருக்கிறது.

வயது: 01.08.2018 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், எம்.பி..ஏ/ சி.ஏ./ வணிகம், பொருளாதாரம், அறிவியல், சட்டம் ஆகியவற்றில் ஏதோவொரு பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. இவர்களைத் தவிர்த்த பிற பிரிவினருக்கு ரூ.600. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவே செலுத்த வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும். சென்னை, பெங்களூரு, திருவனந்தபுரம், ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் தேர்வு நடத்தப்படும்.

 உரிய தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://www.vijayabank.com/ என்னும் இணையதளத்தில் 27.09.2018க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/x2dYhk

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x