Published : 24 Jul 2018 10:54 AM
Last Updated : 24 Jul 2018 10:54 AM

வேலை வேண்டுமா? - விமான நிலைய ஆணையத்தில் பணி

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான நிலைய ஆணையம் (Airports Authority of India) மேலாளர், நிர்வாகி (Junior Executive) ஆகிய பதவிகளில் 900-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேவையான தகுதி SUB HEAD

கல்வித் தகுதியானது பி.ஏ., பி.காம்., பி.எஸ்சி., பி.இ., பி.டெக்.. எம்.பி.ஏ. எனப் பிரிவுகளுக்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சில பதவிகளுக்குப் பணி அனுபவம் அவசியம். சில பணிகளுக்குப் பணி அனுபவம் தேவையில்லை.

வயது வரம்பு மேலாளர் பதவிக்கு 32 ஆகவும், நிர்வாகி பதவிக்கு 27 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இட ஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓ.பி.சி.) 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தகுதியுடையவர் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடல்தகுதித் திறன் அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர். மேலாளர் பதவிக்கு ரூ.1.25 லட்சமும், நிர்வாகி பதவிக்கு ரூ.90 ஆயிரமும் கிடைக்கும், உரிய கல்வித் தகுதி, வயது வரம்புத் தகுதி, பணி அனுபவம் உடைய பட்டதாரிகள் இந்திய விமானநிலை ஆணைய இணையதளத்தைப் (www.aai.aero) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x