Published : 17 Jul 2018 10:30 AM
Last Updated : 17 Jul 2018 10:30 AM

வேலை வேண்டுமா? - வனப் பயிற்சிப் பணி

மிழ்நாடு அரசு வனத் துறையில் வனப் பயிற்சிப் பணிக்கான (Forest Apprentice) 148 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஜூலை 4 அன்று வெளியிட்டுள்ளது. உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக் கட்டணம்: நிரந்தரப் பதிவு செய்திருக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.150 கட்டணம் செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்கு தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தேர்வுக் கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ வங்கி செலான் மூலமாகவோ கட்டலாம்.

வயது: 01.04.2018 அன்று எஸ்.சி., எஸ்.சி. அருந்ததியர், எஸ்.டி., மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர், பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற கைம்பெண்கள் ஆகியோருக்குக் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், உச்சபட்ச வயது 35 ஆகவும் இருக்க வேண்டும். ஏனைய பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18, உச்சபட்ச வயது 30. முன்னாள் ராணுவத்தினருக்கு குறைந்தபட்ச வயது 18, உச்சபட்ச வயது 37.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் வனவியலில் இளநிலைப் பட்டமோ, இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட அறிவியல் பாடங்கள் ஏதாவது ஒன்றில் இளைநிலைப் பட்டமோ பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு மையங்கள்: எழுத்துத் தேர்வுக்கான மையங்கள் சென்னை, மதுரை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், விழுப்புரம்.

உரிய தகுதி கொண்ட விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 01.08.2018

எழுத்துத் தேர்வு: 23.09.2018 – 30.09.2018

கூடுதல் விவரங்களுக்கு: https://goo.gl/wwnfqW

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x