Published : 10 Jul 2018 10:30 AM
Last Updated : 10 Jul 2018 10:30 AM

எம்.எஸ்சி. கணிதம் படிக்க உதவித்தொகை

ல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.), மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) ஆகியவை ‘நெட்’ எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துகின்றன. இதில் வெற்றிபெற்று ஜெ.ஆர்.எஃப். (ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோஷிப்) தகுதி பெறும் முதுகலைப் பட்டதாரிகள் ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொள்ள மாதம்தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப் படுகிறது.

தகுதியும் தேர்வுமுறையும்

இதேபோல, மத்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கிவரும் தேசிய உயர் கணித வாரியம் (National Board for Higher Mathematics) கணிதம் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் எம்.எஸ்சி. கணிதம் படிக்க மாதம்தோறும் ரூ.6 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக வழங்குகிறது.

இந்த உதவித்தொகை 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும். தகுதியான மாணவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். 2018-19-ம் கல்வி ஆண்டுக்கான உதவித்தொகை வழங்குவதற்குத் தற்போது அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பி.எஸ்சி. பட்டதாரிகளும் ஜூலை மாதம் படிப்பை முடிக்க இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

முதல் வகுப்பு மதிப்பெண் அவசியம். எழுத்துத் தேர்வு செப்டம்பர் 22-ம் தேதி சென்னை உள்பட முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. தேர்வில் கணிதப் பட்டப் படிப்பு பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம்பெறும். தகுதியுடைய பி.எஸ்சி. கணிதப் பட்டதாரிகள் www.nbhm.dae.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தி ஜூலை 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களை இந்த இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x