Published : 10 Jul 2018 10:28 AM
Last Updated : 10 Jul 2018 10:28 AM

வேலை வேண்டுமா? - இந்திய ரிஸர்வ் வங்கிப் பணி

ந்திய ரிஸர்வ் வங்கி, கிரேட் ‘பி’ அதிகாரிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை வெயிட்டிருக்கிறது.

காலிப் பணியிடங்கள்:166

வயது: 01.07.2018 அன்று குறைந்தபட்ச வயது 21, அதிகபட்ச வயது 30. அரசு விதிமுறைகளின்படி வயது வரம்புச் சலுகை உண்டு.

கல்வி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் இளைநிலைப் பட்டம், முடித்திருக்க வேண்டும்; சில பணிகளுக்குப் பொருளாதாரத்திலும் சில பணிகளுக்குப் புள்ளியியலிலும் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:இரு நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி ஆகியோருக்கு ரூ. 100. பிறருக்கு ரூ. 850. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் கட்ட வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:உரிய தகுதியுடையோர் www.rbi.org.in - என்னும் இணையதளத்தில் 2018 ஜூலை 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.07.2018

முதல் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 16.08.2018

இரண்டாம் நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு: 06.09.2018 அல்லது 07.09.2018.

கூடுதல் விவரங்களுக்கு:https://goo.gl/QYbwDn

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x