Published : 10 Jul 2018 10:23 AM
Last Updated : 10 Jul 2018 10:23 AM

வெற்றி நூலகம்: ஆங்கிலத்தைப் புத்தகத்திலும் அறிவோமா!

புதிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்பவர்களை மட்டுமல்லாமல் ஏற்கெனவே அம்மொழியில் ஆளுமை படைத்தவர்களையும் வெற்றிக்கொடியில் நீண்ட காலமாக வெளிவரும் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் ஈர்த்துவருகிறது. வாசகர்கள் அளித்த வரவேற்பால் ‘ஆங்கிலம் அறிவோமே’ தொடர் தொகுக்கப்பட்டு ஏற்கெனவே புத்தக வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

அவ்வாறு வெளியிடப்பட்ட ‘ஆங்கிலம் அறிவோமே’-பாகம் 1, பாகம் 2 ஆகிய இரண்டு புத்தகங்களும் சிறந்த ஆதரவைப் பெற்றன. தற்போது அதன் 3-வது பாகம் வெளியாகியுள்ளது. முந்தைய ஆங்கிலம் அறிவோமே புத்தகங்களைப் போலவே இதுவும் உங்களைச் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்து உங்களுடைய ஆங்கில அறிவைச் செழுமைப்படுத்தும் கையேடாகத் திகழும்.

ஆங்கிலம் அறிவோமே பாகம் -III

ஜி.எஸ்.எஸ். ரூ.140

தி இந்து வெளியீடு
தி இந்து தமிழ், கஸ்தூரி மையம்,
14, வாலாஜா சாலை, சென்னை - 600 002
தொலைபேசி:
044 2855 2213, 044 3089 9000

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x