ஆங்கிலம் அறிவோமே- 65: அதுவும் இதுவும் ஒன்றா?

Published : 07 Jul 2015 11:32 IST
Updated : 07 Jul 2015 11:32 IST

இரண்டு வாசகர்கள் “Each, every ஆகிய இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே அர்த்தம்தானா?’’ என்று ஒரே வினாவை ஒரே வாரத்தில் எழுப்பியிருக்கிறார்கள்.

‘‘வரும் ... ஆனா வராது’’ என்பதுபோல “ஒன்றுதான் ... ஆனால் ஒன்றே இல்லை” என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

பொதுவாக, இரண்டு பேர் இருக்கும்போது நாம் each என்ற வார்த்தையையும் (each one of you என்பதைவிட each of you என்பதைப் பயன்படுத்துங்கள்), இருவருக்கு மேல் இருந்தால் every என்ற வார்த்தையை (every one of you) பயன்படுத்துவோம்.

இந்த இரண்டில் every என்பது மேலும் வலுவானது. ‘எந்த ஒரு விதிவிலக்கும் இல்லாமல்’ என்பதை இது குறிக்கிறது. சிலர் அழுத்தந்திருத்தமாக ‘each and every one of you’ என்பதுண்டு.

Each என்பது ஒரு குழுவில் உள்ள ஒவ்வொரு தனிநபருக்கான வார்த்தை. Every என்பது மொத்தக் குழுவையும் குறிக்கிறது.

Each என்பதைப் பயன்படுத்தும்போது அது எவ்வளவு பேருக்கானது என்பதில் தெளிவு இருக்கும். Every என்பதைப் பயன்படுத்தும்போது அதற்குக் குறிப்பிட்ட எண்ணிக்கை என்று கிடையாது. அதாவது ‘ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே’ என்ற பாடல் வரியை மொழிபெயர்க்கும்போது each என்பதைவிட every என்பதைப் பயன்படுத்துவதுதான் சரியானது.

ஒரு வாசகர் “Hobbit என்பதற்கும் Android என்பதற்கும் என்ன வித்தியாசம்?” என்கிறார்.

Hobbit என்பது மனிதனைப் போலவே காட்சியளிக்கும். ஆனால், உயரம் சுமார் மூன்று அடிதான் இருக்கும். தனது Lord of the Rings கதைகளில் இந்தக் கதாபாத்திரத்தை மட்டுமல்ல Hobbit என்ற சொல்லையும் அறிமுகப்படுத்தினார் எழுத்தாளர் டோல்கியன்.

Hobbit மனிதர்கள் கற்பனையானவர்கள். மரப் பொந்துகளிலும்கூட வசிக்கக் கூடியவர்கள். Hobbit- ன் பாதங்கள் ரோமங்கள் நிறைந்ததாக இருக்கும்.

Android என்பதும் மனிதன் போன்ற உருவம் கொண்டதுதான். எந்திரன் படத்தில் சிட்டி இந்த வகைதான். பல நவீன செல்போன்களில் உள்ள சாப்ட்வேர்களையும் Androit என்கிறார்கள். கிரேக்க மொழியில் Andreides என்றால் மனிதனைப்போல என்ற அர்த்தம்.

வேண்டும் THE வேண்டாத THE

கீழே உள்ள பகுதியில் எந்தெந்த இடங்களில் ‘the’ தேவையில்லை என்பதைக் கூறுங்கள் பார்க்கலாம்.

1. I learnt the French at the school.

2. The children like balloons.

3. The computers are used in offices.

4. The breakfast is ready.

5. He was elected the Prime Minister.

ஒரு மாணவியின் கடிதம் இது.

“என் வீட்டுக்கு அப்பாவின் நண்பர் ஒருவர் வந்திருந்தார். என் அப்பா என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு “நிறைய முயற்சி எடுத்துப் படிக்கிறா” என்று பாராட்டுதலாகச் சொன்னார். அதற்கு அப்பாவின் நண்பர் “The proof is in the pudding” என்று கூறினார். அப்பாவும் அதற்கு சிரித்தார். அப்புறம் அப்பாவிடம் அதற்கான அர்த்தத்தைக் கேட்டேன். ‘யாருக்குத் தெரியும்?’ என்று சிரிக்கிறார். நீங்களாவது சொல்லுங்கள்”.

‘நிறைய முயற்சிகள் எடுத்துக் கொண்டால் போதுமா? அது வெற்றிகரமாக முடியும்போதுதான் அந்த முயற்சிகளுக்கே ஒரு அங்கீகாரம் கிடைக்கும்’. இதுதான் The proof is in the pudding என்பதற்கான அர்த்தம்.

Pudding என்றால் என்ன என்ற கேள்வி வாய்ப்பு உண்டு. (இந்த வார்த்தையை ‘புடிங்’ என்று உச்சரிக்க வேண்டும்). இதே பகுதியில் முன்பு ஒருமுறை dessert பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். மேற்கத்திய உணவின் இறுதியில் சாப்பிடும் ஐட்டங்களை (ஐஸ்கிரீம், இனிப்புகள் போன்றவை) dessert என்பார்கள்.

இது அமெரிக்கர்கள் பயன்படுத்தும் சொல். இதைத்தான் பிரிட்டிஷ்காரர்கள் pudding என்கிறார்கள். (தமிழர்கள் புட்டு என்பதைக் குறிக்கவும் pudding என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது வேறு விஷயம்).

இப்போது the தொடர்பான கேள்விகளுக்கான விடை - எல்லா இடங்களிலுமே the என்பது நீக்கப்பட வேண்டியதுதான்.

பொருட்களின் பெயருக்கு முன்னால் the தேவையில்லை. Silver is a white metal. The silver அல்ல.

பொதுவான அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பன்மைப் பெயர்ச் சொற்களுக்கு முன்னாலும் தேவையில்லை. Children like chocolates. The children என்றால் குறிப்பிட்ட சில குழந்தைகளைக் குறிப்பதான அர்த்தம் வந்துவிடும்.

மொழிகளைக் குறிப்பிடும்போதும் அவற்றிற்கு முன்னால் the வேண்டாம். We are learning English.

Righteous என்றால் ‘சரியான’ என்றுதானே அர்த்தம் எனும் வாசகரின் கேள்விக்குப் பதில் இதுதான்.

சரியான என்பதையும் தாண்டிய சரியானது இது! Righteous people என்றால் மிகவும் ஒழுக்க நெறி கொண்ட என்று அர்த்தம். நடைமுறையில் புனிதமான, மதம் சார்ந்த என்ற அர்த்தத்தில்தான் இந்த வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.

Rightful என்ற வார்த்தைக்கு உரிமை கோரும் தகுதி என்று அர்த்தம். He is the rightful owner of this house.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor