ஆங்கிலம் அறிவோமே 167: சின்னச் சின்ன ஆசை!

Published : 04 Jul 2017 10:23 IST
Updated : 04 Jul 2017 10:23 IST

கேட்டாரே ஒரு கேள்வி

Lounge என்பது இழிவுபடுத்தும் வார்த்தை என்கிறார்களே. பின் ஹோட்டல்களில் lounge என்று ஒரு பகுதி இருக்கிறதே!

*************

Eternal triangle என்றால் என்ன அர்த்தம்?

Eternal என்றால் என்றென்றும் என்று பொருள். Eternal triangle என்பது காலங்காலமாக இந்தியத் திரைப்படங்களிலுள்ள முக்கோணக் காதலைக் குறிக்கிறது. அதாவது இரண்டு ஆண் - ஒரு பெண் அல்லது இரண்டு பெண் - ஒரு ஆண் ஆகியோருக்கிடையே உண்டாகும் காதல்.

சின்னச் சின்ன ஆசை என்பதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யுங்கள் பார்க்கலாம்.

*************

ஒரு ஹோட்டலின் Lounge என்பது அந்த ஹோட்டலின் அறைகளில் தங்கும் யார் வேண்டுமானாலும் உட்கார்ந்து களைப்பாற ஒதுக்கப்பட்ட பகுதி. உங்களுக்கு அறை ஒதுக்கச் சிறிது நேரம் ஆகும் என்றால் அதுவரை lounge-ல் உட்காரச் சொல்வார்கள். விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள் உட்காரும் இடம்கூட loungeதான்.

ஆனால், அதே வார்த்தையை lounging என்று பயன்படுத்தும்போது (அதாவது lounge என்பதை verb ஆகப் பயன்படுத்தும்போது) களைப்பாறுவது என்பதைவிட நேரத்தை வீணடிப்பது என்கிற எதிர்மறை அர்த்தத்தில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

*************

சின்னச் சின்ன ஆசை என்பதை ‘small small’ என்று தொடங்கி மொழியாக்கம் செய்யக் கூடாது.

கார்ட்டூனில் இடம் பெறுவதுபோல (small, small, one, one, little little, big big) ஒரே ஆங்கில வார்த்தை அடுத்தடுத்து இடம் பெறுவதில்லை.

பாடல்களில் (நர்சரி ரைம்ஸ்களில்) இப்படி இடம் பெறலாம் - Baa baa black sheep, twinkle twinkle little star என்பதுபோல. ஆனால் உரைநடையிலும் உரையாடல்களிலும் அப்படி இடம்பெறுவதில்லை.

தமிழில் இப்படி அடுக்குத் தொடர்களை (சின்னச் சின்ன ஆசை, வண்ண வண்ணப் பூக்கள்) நாம் பயன்படுத்திப் பழகிவிட்டதால் ஆங்கிலத்திலும் இப்படிப் பேசுகிறோம். ஆனால் அது தவறு.

முதல் வரியில் அடுக்கு தொடர் உள்ள [அதாவது ஒரே வார்த்தை அடுத்தடுத்து இருமுறை(யாவது) பயன்படுத்தப்பட்டுள்ள] சில தமிழ்த் திரைப்படப் பாடல்கள் உண்டு. அவற்றில் சிலவற்றின் ஆங்கில வடிவத்தைக் கொடுத்திருக்கிறோம். திரைப்படப் பாடல்களைக் கண்டுபிடியுங்கள். உங்கள் விடைகளை மூன்று நாட்களுக்குள் வந்து சேருமாறு அனுப்புங்கள். உங்கள் பெயர், வசிக்கும் ஊரின் பெயர் இரண்டையும் குறிப்பிடுங்கள்.

1. O flowers, is this a dream?

2. Come spring. O, pleasing aroma.

3. Has the lover arrived to express love?

4. What a communication through miniscule glance!

5. Work hard. Give to everyone.

6. Now it is wish. When will it be greed?

7. O river, river of love, aren’t you also a woman?

8. Come to make love.

*************

The letter was sent between 2015 to 2016 to all branches. இந்த வாக்கியத்தில் ஒரு தவறு உள்ளது. இதேபோன்ற வாக்கியத்தைக் கணிசமானவர்கள் பயன்படுத்துவதைக் காண முடிகிறது. எனவே, இந்த விளக்கம்.

Between என்று வந்தால் ‘and’ என்ற வார்த்தைதான் இடம்பெறும். அதாவது The letter was sent between 2015 and 2016. அல்லது வேறு விதத்திலும் இதைக் குறிப்பிடலாம். The letter was sent between 2015-2016.

*************

Inclusive – Exclusive

Inclusive, Exclusive ஆகிய வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் குழப்பமாக இருக்கிறது. கொஞ்சம் விளக்க முடியுமா என்கிறார் ஒரு வாசக நண்பர்.

இரண்டும் எதிர்மறைச் சொற்கள். இரண்டும் பெரும்பாலும் adjective ஆகப் பயன்படுத்தப்படுகின்றன.

Inclusive என்றால் தொடர்பானவற்றை உள்ளடக்கியது. Exclusive என்றால் அப்படி உள்ளடக்கவில்லை.

The charges are Rs.7,000/- inclusive of breakfast and dinner என்றால் காலைச் சிற்றுண்டி, மதிய உணவுக்காகத் தனியாகப் பணம் செலுத்த வேண்டியதில்லை. அந்த 7,000 ரூபாய்க்குள்ளேயே இது அடக்கம். மாறாக exclusive என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருந்தால் இந்த உணவுகளுக்கு அதிகப்படியான பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்று பொருள்.

Inclusive என்றால் அனைத்தும் உள்ளடக்கிய என்ற அதிகப்படி அர்த்தமும் இருக்கக் கூடும். Only with an all inclusive peace process, the conflict can be resolved எனும்போது inclusive என்பது சம்பந்தப்பட்ட அனைவரையும் உள்ளடக்கியது என்று பொருள்.

*************

Half of the apples was rotten என்பது சரியா அல்லது Half of the apples were rotten என்பது சரியா? என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

அதாவது one என்பதைவிடக் குறைவானது half. எனவே, அதை plural ஆக வைத்துக் கொள்ள முடியாது. எனவே, Half of the apples was rotten எனலாமே’ என்கிற தர்க்கம் சரியானதல்ல. Apples என்று கூறும்போதே ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பிள் என்று ஆகிறது. அதாவது ஆறு ஆப்பிள்கள் இருந்தால், அதில் மூன்று ஆப்பிள்கள் கெட்டுப்போய்விட்டன என்பதுபோல. எனவே, ‘Half of the apples were rotten’ என்பதுதான் சரி.

அதற்காக Half of என்று தொடங்கினாலே அது பன்மை என்று ஆகாது. Half of our task was done என்பதுதான் சரி.

*************

போட்டியில் கேட்டுவிட்டால்?

The terrorist was _______________ at the railway station.

(a) Hung

(b) Nabbed

(c) Patted

(d) Abandoned

(e) Sentenced

ரயில்வே ஸ்டேஷனில் தீவிரவாதிகளைத் தூக்கிலிட மாட்டார்கள், தட்டிக்கொடுக்க மாட்டார்கள், தண்டனை விதிக்க மாட்டார்கள், விட்டுவிட்டுச் செல்ல மாட்டார்கள். எனவே hung, patted, sentenced, abandoned ஆகிய வார்த்தைகள் பொருந்தவில்லை.

Nab என்றால் தவறு செய்யும் ஒருவரைப் பிடிப்பது. எனவே nabbed என்ற வார்த்தைதான் இங்குப் பொருந்தும்.

The terrorist was nabbed at the railway station.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor