ஆங்கிலம் அறிவோமே - 138: முந்திரிக் கொட்டைத்தனமா பேசாதே!

Published : 13 Dec 2016 09:32 IST
Updated : 13 Dec 2016 09:56 IST

கேட்டாரே ஒரு கேள்வி

Restive என்றால் ஓய்வெடுத்துக் கொள்வது என்றுதானே அர்த்தம்? ஒரு புத்தகத்தில் இது இடம் பெற்ற ஒரு பகுதியில் இந்த அர்த்தத்தைப் பொருத்திப் பார்த்தால் சரியாக வரவில்லையே.



‘Nuts and bolts’ என்றால் அதன் பொருள் என்ன என்று கேட்கும் வாசகருக்குப் பாராட்டுகள். ஏனென்றால் இந்த வார்த்தைகளுக்குப் பொருள் நமக்குப் பரிச்சயமான ‘நட்டுகளும் போல்ட்டுகளும்’ அல்ல என்பது அவருக்குத் தெரிந்திருக்கிறது.

Nuts and bolts என்றால் அடிப்படையான தகவல்கள் என்று அர்த்தம். The nuts and bolts of staging a play என்றால் ஒரு நாடகத்தை மேடை ஏற்றுவதற்கான அடிப்படை விஷயங்கள் என்று பொருள்.

Nuts தொடர்பான வேறு சிலவற்றையும் பார்த்துவிடுவோமே.

முந்திரியின் ஆங்கிலப் பெயர் என்ன என்று கேட்டால் சிலர் முந்திரிக் கொட்டைத்தனமாக cashew nut என்று பதில் கூறலாம். பாதாம் பருப்பின் பெயர் almond. வேர்க்கடலையின் பெயர் groundnut. Nut வகையைச் சேர்ந்ததில்லை என்றாலும் உடைத்த கடலை அல்லது பொட்டுக்கடலை என்பதன் ஆங்கிலப் பெயரையும் தெரிந்து கொள்வோம் roasted gram. வாதுமைக் கொட்டையின் பெயர் walnut. இதை அக்ரூட் என்றும் கூறுவதுண்டு.

In a nutshell என்றால் குறைந்தபட்ச வார்த்தைகளில் ஒன்றைக் கூறுவது என்று அர்த்தம். Be nuts about என்றால் ஒன்றைப் பற்றி மிக உற்சாகமாக இருத்தல் என்று அர்த்தம். He is a hard nut to crack என்று ஒருவரைப் பற்றிக் குறிப்பிட்டால், அவரோடு பழகுவது ரொம்ப கஷ்டம் என்றும் அவரை ஒரு விஷயத்துக்குச் சம்மதிக்க வைப்பது மிகக் கஷ்டம் என்றும் பொருள்.



இந்த வாரத்தின் ‘கேட்டாரே ஒரு கேள்வி’ க்கான விளக்கம், Restive என்பதற்குப் பொருள் (வாசகர் நினைத்துக் கொண்டிருப்பதற்கு) நேரெதிரானது. Restive என்றால் அமைதியாகவோ, மவுனமாகவோ இருக்க முடியாத நிலை. அதிருப்தி காரணமாகவோ, ‘போர’டிக்கும் நிலை காரணமாகவோ இப்படி ஏற்படலாம்.

The crowd has been waiting for hours and many are becoming restive.

இதேபோல நமக்கு ஆச்சரியத்தை அளிக்க வாய்ப்பு உள்ள இன்னொரு வார்த்தை enervate. Enervate என்பதன் பொருள் ‘சக்தி அளிக்கக்கூடிய’ என்பதல்ல. சக்தி இழந்த நிலையைத்தான் enervate என்பார்கள். அதாவது exhaust, wear out, weaken என்பதைப்போல. As his enemies were enervated, his victory was clear.



“This is my fervant appeal என்கிறார்களே, fervant என்பதன் அர்த்தம் என்ன?”

இந்த வாசகர் மட்டுமல்ல வேறு சிலரும் கூட அந்த வார்த்தையைத் தவறாக எழுதுகிறார்கள். அது fervent.

Fervent என்றால் மிக ஆழமான அல்லது தீவிரமான என்று கொள்ளலாம். Fervent appeal என்றால் தீவிரமான வேண்டுகோள்.

The buyers were fervent about the house என்றால் மிக அதிக விலைக்கும் அதை அவர்கள் வாங்கத் தயாராக இருப்பார்கள்.



Moral - Morale

Moral என்றால் நல்லொழுக்கம். Moral story என்றால் அந்தக் கதை மூலம் ஒரு நல்லொழுக்கம் போதிக்கப்படுகிறது எனலாம்.

Morale என்பது மன உணர்வு தொடர்பானது. Your morale seems low. Are you OK? என்பது சோர்வாகக் காணப்படும் ஒருவரைப் பார்த்துக் கேட்கப்படும் கேள்வி.

If you are trying to keep their spirits up, you are trying to maintain their morale.

Moral என்பதை ‘மாரல்’ என்றும் Morale என்பதை ‘மொரேல்’ என்றும் உச்சரிக்க வேண்டும்.



பேசும்போது சிலர் சில வாக்கியங்களுக்குப் பிறகு, ‘period’ என்கிறார்களே இதற்கு என்ன அர்த்தம்?

வாசகரே, period என்றால் முற்றுப்புள்ளி. சில சமயம் அழுத்தந்திருத்தமாக ஒன்றைக் குறிப்பிட period என்ற வார்த்தையைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துவதுண்டு. “Will you please attend the meeting?” என்ற கேள்விக்கு “I do not want to do that, period” என்ற பதிலைக் கவனியுங்கள். அதன் பொருள் “அதுதான் அந்த meetingஐ attend செய்ய மாட்டேன்னு சொல்லியாச்சே. அதை நான் மாத்திக்கத் தயாராகல்லே” என்பதுதான்.

“Do you really do not want to participate in the singing contest today?” என்ற கேள்விக்கு, “I do not want to, period” என்று ஒருவர் கூறினால் “நான் சொன்னால் சொன்னதுதான் அதுக்கு மேலே பேச்சில்லே” என்று அர்த்தம். அதாவது வாக்கியத்தின் முடிவில் இடம்பெறும் முற்றுப்புள்ளி எப்படி அந்த வாக்கியத்தை முடித்து வைக்கிறதோ அதுபோல நீங்களும் ஒரு விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறீர்கள்.

மேற்படி அர்த்தத்தில் period பயன்படுத்தப்படுவது பேச்சுவழக்கில்தான்.

Full stop என்பது பிரிட்டிஷ் ஆங்கிலம். Period என்பது அமெரிக்க ஆங்கிலம்.



போட்டியில் கேட்டுவிட்டால்

He is an artist _______a sculptor.

a) but also

b) too

c) as well as

d) as well

நான்கில் எது சரியான விடை? முதலில் வாக்கியம் என்ன என்பதைப் பார்ப்போம். அவன் ஒரு ஓவியன் மட்டுமல்ல, சிற்பியும்கூட என்பதுதான் அந்த வாக்கியம்.

கொடுக்கப்பட்டுள்ள விடைகளில் ‘and’ என்பது இல்லை. அப்படியிருந்தால் கோடிட்ட இடத்தில் ‘and’ என்று நிரப்பினால்கூடப் பொருத்தமாகத்தான் இருக்கும்.

நான்காவது optionஆன He is an artist as well as a sculptor என்பதுதான் சரியான விடை.

இப்போது அந்த வாக்கியம் எப்படியிருந்தால் மீதி விடைகள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பார்ப்போம்.

He is not only an artist but also a sculptor.

He is an artist and a sculptor too.

He is an artist and a sculptor as well.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

சிப்ஸ்

* Burrow என்பது என்ன?

நிலத்தில் போடப்பட்ட துளை. Rats live in burrows.

* Storm in a tea cup என்றால், அது பெரும் புயலைக் குறிக்கிறதா?

இல்லை. அதற்கு நேரெதிர். (ஒரு தேநீர் கோப்பையில் என்ன பெரிய புயல் உருவாகிவிடும்?) மிகவும் அற்பமான அல்லது ஒன்றுமில்லாத என்று பொருள். Do not worry about the silly quarrel. It was just a storm in a tea cup.

* நாளிதழ் ஒன்றில் degust என்ற வார்த்தையைப் பார்த்தேன். They can degust the food for once என்று கொடுக்கப்பட்டிருந்தது. Digest என்பதற்குப் பதிலாக நேர்ந்த அச்சுப் பிழைதானே?

இல்லை. Degust என்றால் ஒன்றை ரசித்துச் சாப்பிடுவது என்று பொருள்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor