ஆங்கிலம் அறிவோமே - 125: மரகதமே, மாணிக்கமே!

Published : 30 Aug 2016 10:28 IST
Updated : 14 Jun 2017 19:14 IST

“நான் அலுவலகத்தில் ஒரு தவறு செய்து விடுகிறேன். அதை ஒருவர் திருத்துகிறார். உடனே அதற்கு என்ன சொல்ல வேண்டும்? Sorry என்றா, Thanks என்றா? அல்லது வேறு எப்படி?’’ என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

இந்தச் சூழலில் நீங்கள் பலவிதமான வாக்கியங்களைக் கூறலாம். அவற்றில் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

$Thanks for the correction.

$This is indeed helpful.

$Thanks. A very timely correction Sir / Madam.

$ I did not realize that. Thanks for letting me know.

வைரம், வைடூரியம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் எப்படிக் கூற வேண்டும் எனக் கேட்கிறார் ஒருவர்.

நவரத்தினங்களையும் பார்த்துவிடு வோமே. கீழே உள்ள ஒவ்வொன் றுக்குமான தமிழ் வார்த்தையைக் கூறுங்கள்.

1. Coral

2. Pearl

3. Emerald

4. Cat’s eye

5. Topaz

6. Ruby

7. Lapis Lazuli

8. Diamond

9. Sapphire

உங்கள் விடை சரியானதா என்பதைக் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

**********

He is a timid man என்றாலும் He is a reserved man என்றாலும் அர்த்தம் ஒன்றுதானா?

Adjectives பலவும் ஒரே மாதிரி பொருளைக் கொடுத்தாலும் மெல்லிய வேறுபாடுகள் அவற்றுக்கிடையே இருக்கும். அவர் ரொம்ப reserved type என்கிறோம். Reserved என்பதற்கு ஈடான வார்த்தைகளாக aloof, modest, secretive, unapproachable, cold என்று பல வார்த்தைகளைக் கூறலாம். என்றாலும் ஒவ்வொன்றுக்குமிடையே ஒரு சிறிய வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது.

கீழே உள்ள adjectiveகளைக் கூட நீங்கள் கவனிக்கலாம்.

A QUIET person, a NERVOUS player, a BASHFUL kiss, an EMBARASSED smile.

Fidelity என்றால் என்ன?

ஒருவரிடம் கொண்ட நம்பிக்கையின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரவும், நம்பிக்கையும் கொள்வது. என்றாலும் தன் வாழ்க்கைத் துணைவரிடம் பற்று கொண்டு அவருக்குத் துரோகம் செய்யாமல் இருப்பதைக் குறிக்கவே இந்த வார்த்தை அதிகம் பயன்படுகிறது.Wi-Fi (வைஃபை) என்பதன் விரிவு Wireless Fidelity என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு தொழில்நுட்பத்தின் பிராண்ட் பெயர், அவ்வளவே.

**********

ஆங்கிலத்தில் Auxiliary verbs எத்தனை உண்டு? என்று கேட்டிருக்கிறார் ஒரு வாசகர்.

முன்பு இத்தொடரில் Auxiliary verb என்பது tense, voice போன்றவற்றை சுட்டிக் காட்டி வாக்கியத்தை இலக்கணமாக அமைக்க உதவுகின்றன என்று குறிப்பிட்டிருந்தேன். இவை பெரும்பாலும் main verb-உடன் காணப்படும். I am coming என்ற வாக்கியத்தில் coming என்பது main verb. Am என்பது auxiliary verb. They have arrived என்ற வாக்கியத்தில் arrived என்பது main verb. Have என்பது auxiliary verb. இப்படிச் சில எடுத்துக்காட்டுகளையும் அளித்திருந்தேன்.

ஆங்கிலத்தில் மொத்தம் 16 auxiliary verbs உள்ளன. இவற்றில் Be, do, have ஆகிய மூன்றும் primary auxiliary verbs. Can, could, dare, may, might, must, need, ought, shall, should, used (to), will, would ஆகிய 13 Modal auxiliary verbs.

ஏதாவது

தலைவர் இறந்தால் கொடியை half mast-ல் hoist செய்ய வேண்டுமென்கிறார்களே, இதில் mast, hoist என்பதற்கான பொருள் என்ன? இது ஒரு வாசகரின் சந்தேகம்.

இதைப் புரிந்துகொள்ள முதலில் கொடிகளின் பாகங்களை அறிந்துகொள்ள வேண்டும்.

கொடிக் கம்பத்தை mast என்போம்.

ஒரு கொடிக் கம்பத்தின் உச்சியில் பறக்கிறது என்று வைத்துக்கொள்வோம். கொடிக்கம்ப உச்சிக்கு மிக அருகில் இருக்கும் கொடிப் பகுதியை hoist என்பார்கள். கொடிக் கம்ப உச்சியிலிருந்து மிக அதிக தூரம் இருக்கும் கொடிப் பகுதியை fly என்பார்கள். கொடியை மேலும் கீழும் உயர்த்தவும் தாழ்த்தவும் பயன்படும் கயிற்றுக்குப் பெயர் halyard. கொடிக் கம்பத்தின் உச்சியில் சின்னதாக ஒரு கோளம் போன்ற பகுதி இருக்கும். அதன் பெயர் truck.

நவரத்தினங்களின் தமிழ் வார்த்தைகள் மேற்கூறிய வரிசைகளில் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

1. பவளம்

2. முத்து

3. மரகதம்

4. கோமேதகம்

5. புஷ்பராகம்

6. மாணிக்கம்

7. வைடூரியம்

8. வைரம்

9. நீலம்

“I will call on you என்று ஒருவர் கூறினால் என்ன அர்த்தம்? அவர் தொலைபேசியில் தொடர்புகொள்வார் என்று அர்த்தமா அல்லது நேராக வீட்டுக்கு வரப்போகிறார் என்று அர்த்தமா?’’ என ஒருவருக்கு சந்தேகம்.

“I will call you’’ என்றால் “நான் உங்களைத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்” என்று அர்த்தம்.

“I will call on you’’ என்றால் “நான் உங்கள் இருப்பிடத்துக்கு வந்து செல்லப் போகிறேன்” என்று அர்த்தம்.

“I will call you back’’ என்றால் “நீங்கள் தொடர்புகொண்டீர்கள். (நான் இப்போது பிசியாக இருப்பதால்) நான் உங்களைப் பிறகு தொலைபேசியில் அழைப்பேன்” என்று அர்த்தம்.

“I called out the doctor’’ என்றால் ஓர் அவசரத்துக்காக டாக்டரை வருமாறு அழைத்தேன் என்று பொருள்.

“I called off the trip’’ என்றால் திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்தேன் என அர்த்தம்.

தொடர்புக்கு:

aruncharanya@gmail.com

சிப்ஸ்

l Orchard என்றால்?

பழத்தோட்டம்.

l Confectioner என்றால் அது யாரைக் குறிக்கிறது?

இனிப்புகளைத் தானே தயாரித்து விற்பவர்.

l Lair என்று ஒரு வார்த்தை இருக்கிறதா?

இல்லையென்று சொன்னால் நான் liar ஆகிவிடுவேன். Lair என்பது வனவிலங்கு ஒன்று ஓய்வெடுத்துக்கொள்ளும் பகுதி அல்லது குகையைக் குறிக்கிறது.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor