Published : 24 May 2019 02:17 PM
Last Updated : 24 May 2019 02:17 PM

யோகி பாபுவின் ‘தர்மபிரபு’: ஜூன் 28-ம் தேதி ரிலீஸ்

யோகி பாபு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘தர்மபிரபு’ படம், ஜூன் 28-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விமல், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கன்னி ராசி’. இந்தப் படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்கள் ஆனாலும், படத்தின் ரிலீஸ் தாமதமாகிக் கொண்டே செல்கிறது.

எனவே, யோகி பாபுவை முதன்மைக் கதாபாத்திரமாக வைத்து ‘தர்மபிரபு’ என்ற படத்தை இயக்கியுள்ளார் முத்துக்குமரன். கருணாகரன், ராதாரவி, சாம் ஜோன்ஸ், ஜனனி ஐயர், மனோபாலா, ரேகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். ஸ்ரீவாரி ஃபிலிம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. கடந்த மார்ச் மாத இறுதியில் வெளியான இந்தப் படத்தின் டீஸருக்கு, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில், இதன் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. மேலும், வருகிற ஜூன் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாகத் தற்போது திகழ்ந்துவருபவர் என்பதால், யோகி பாபுவுக்கெனத் தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. அவர் படத்தில் இருந்தாலே ராசி என நினைத்து, பல படங்களில் அவரை ஒருசில காட்சிகளிலாவது நடிக்க வைத்துவிடுகின்றனர்.

‘தர்மபிரபு’ படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பால், இதன் இரண்டாம் பாகம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளார் முத்துக்குமரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x