Published : 21 May 2019 06:53 AM
Last Updated : 21 May 2019 06:53 AM

திரை விமர்சனம்- மான்ஸ்டர்

சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றுபவர் எஸ்.ஜே.சூர்யா. அவருக்கு பெண் கிடைப்பது தாமதமாகிறது. ‘கல் யாணம் இருக்கட்டும். முதலில் வீடு வாங்கு’ என்று நண்பர் கருணாகரன் யோசனை சொல்ல, வீடு பார்க்கும் படலத்தில் இறங்கு கிறார் சூர்யா. அடுக்குமாடி குடியிருப்பில் வீடு பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், திருமண விஷயம் தொடர்பாக பிரியா பவானி சங்கரிடம் இருந்து அழைப்பு வரு கிறது. ராசியான அந்த வீட்டையே விலை பேசி முடிக்கிறார். உற்சாகமாக அங்கு குடியேறும் அவரது நிம்மதியை கெடுக் கிறது அந்த வீட்டை அதகளம் பண்ணும் ஓர் எலி. அதனால் அவர் அனுபவிக்கும் தொந்தரவுகள் என்ன? அந்த எலி ஏன் அவரை குறிவைக்க வேண்டும்? அவரது திருமணம் நடந்ததா? வள்ளலார் வழி செல்லும் எஸ்.ஜே.சூர்யா, எலியை என்ன செய்தார்? இது தான் ‘மான்ஸ்டர்’ படத்தின் மீதிக் கதை.

நாயகனுக்கு இணையாக ஓர் எலியை நடிக்கவைத்து, துளியும் போர டிக்காமல் கடைசி வரை ரசிகர்களை குஷிப்படுத்துகிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். எலி விஸ்வரூபம் எடுத்து மனிதனோடு சண்டை போடுவது, எதி ரியை பழிதீர்ப்பது, காதலிப்பது என்று கற் பனை பக்கம் திரும்பாமல், சாதாரண மாக வீடுகளில் எலி செய்யும் தொந்தரவு கள், சேட்டைகளை அப்படியே காட்சிப் படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருந்திருக்கிறார். அதில் முடிந்தவரை வெற்றியும் பெறுகிறார். அதேசமயம், ‘இந்த இடத்தில் எலி நின்று மிரட்டினால் நன்றாக இருக்கும்’ என நாம் எதிர்பார்க் கும் இடங்களில்கூட அதன் சேட்டைகள் இல்லாதது ஏமாற்றமே.

எலி, எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன் - இந்த நான்கே கதாபாத்திரங்கள்தான் கதையின் மையம். அனைவரும் தங்கள்

பகுதியை சிறப்பாக செய்துள்ளனர். இரட்டை அர்த்த வசனம், முரட்டு வில் லத்தனம் இல்லாத, ‘அஞ்சனம் அழகிய பிள்ளை’யாக, அரசு உத்யோகம் பார்க் கும் நடுத்தர வீட்டு இளைஞன் பாத்திரத் தில் கச்சிதமாக பொருந்துகிறார் எஸ்.ஜே.சூர்யா. கொஞ்சம்கூட மிகையில்லாத நடிப்பு. கருணாகரனுடன் சேர்ந்து அவர் அரங்கேற்றும் காமெடி கலாட்டாக்கள் சிறப்பு. நாயகனை நகைக்கடையில் எதிர் கொள்வது, ஹோட்டலில் சந்தித்து அன்பை வெளிப்படுத்துவது, காவல் நிலையத்தில் நிற்பது என ஒவ்வொரு இடத்திலும் இயல்பாக நிற்கிறார் பிரியா பவானி சங்கர். காதல் காட்சிகள் கண் ணியமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நெல்சன் வெங்கடேசன் - சங்கர் தாஸ் கூட்டு எழுத்தாக்கம் கவனிக்க வைக் கிறது. பெண் பார்க்கச் செல்லும் இடத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு நடக்கும் ஏமாற்றம், வாடகை வீட்டில் அனுபவிக் கும் பிரச்சினைகள், மின்வாரிய அலுவல ராக அவர் எதிர்கொள்ளும் சம்பவங் கள் ஆகியவை இயல்பாக இருப்பதால் கதைக்குள் முழுமையாக ஒன்றமுடி கிறது. ஆனால், கிளைக்கதைகளில் சுவா ரஸ்யம் இல்லை. வீட்டுக்குள் வைரத்தை மறைத்து வைத்துவிட்டு தேடும் வில்ல னின் பகுதிகளும், அதைச் சுற்றி நடக் கும் நிகழ்வுகளும் செயற்கை.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ‘தீரா காதல்’, ‘என்னைத் தேடி’ ஆகிய பாடல் கள் மெலோடி. எலி காட்சிகளில் பின்னணி இசை சேர்ப்பு கச்சிதம். சாபு ஜோசப் எடிட் டிங்கில் நல்ல உழைப்பு தெரிகிறது. வீடு முழுக்க எலியோடு பயணிக்கும் கோகுலின் கேமரா படத்துக்கு பலம்.

குழந்தைகளுக்கும், பெரியவர் களுக்கு இந்த கருப்பு ‘ஸ்டூவர்ட் லிட்டில்’ சுவாரஸ்ய அனுபவமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x