Published : 06 Apr 2019 08:10 AM
Last Updated : 06 Apr 2019 08:10 AM

விஜய் சேதுபதியை பிடிக்கும்!

ரூபாறு பேஸ் ஆஃப் பியூட்டி இன்டர்நேஷனல் இந்தியா’ என்ற அழகிப்போட்டியில் ‘மிஸ் இந்தியா எலைட் 2019’ என்ற பட்டம் வென்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த அபூர்வி சைனி. அவர் பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசியதாவது, “உத்திரபிரதேசம்தான் சொந்த ஊர். ஆனால், தென்னிந்தியாவை மிகவும் பிடித்துவிடவே சென்னை வந்தேன். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் அதிகம்.

‘96’ படத்தில் விஜய் சேதுபதி  நடிப்பைப் பார்த்து பிரமித்துவிட்டேன். நடிகைகளில் நயன்தாராவை பிடிக்கும். சர்வதேச அளவில் மாடலிங் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதுடன், சினிமாவில் கால்பதிக்க வேண்டும் என்பதும் என் ஆசை. சிறுவயது முதலே வறுமை மற்றும் பெண் வன்கொடுமைக்கு எதிராக நான் போராடி வரு கிறேன்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x