Last Updated : 26 Mar, 2019 03:25 PM

 

Published : 26 Mar 2019 03:25 PM
Last Updated : 26 Mar 2019 03:25 PM

‘அதே கண்கள்’ இயக்குநர் இயக்கத்தில் தமன்னா

‘அதே கண்கள்’ இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில், தமன்னா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

2017-ம் ஆண்டு ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி, ஷிவதா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'அதே கண்கள்'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. சி.வி.குமார் தயாரித்தார்.

இப்படத்துக்கு கிடைத்த வரவேற்பால், இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் தனது அடுத்த படத்துக்கான கதையில் பொறுமை காத்தார். இறுதியில், ஹாரர் காமெடி பாணியில் ஒரு கதையை உருவாக்கினார்.

தற்போது இக்கதையில் நடிக்க தமன்னா சம்மதம் தெரிவித்துள்ளார். இதில், யாருக்கும் நாயகியாக தமன்னா நடிக்கவில்லை. தனிப்பட்ட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

மேலும், தமன்னாவோடு நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x