Published : 22 Mar 2019 02:14 PM
Last Updated : 22 Mar 2019 02:14 PM

கதாநாயகியாகக் களமிறங்கும் வாணி போஜன்

சீரியல் மூலம் பிரபலமான வாணி போஜன், தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடிக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆஹா’ சீரியலில் அறிமுகமானவர் வாணி போஜன். ஜெயா டிவியில் ஒளிபரப்பான ‘மாயா’ சீரியலில் நடித்தவர், அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பான ‘தெய்வமகள்’ சீரியலில் நடித்தார். இந்த சீரியல், அவருக்கு நிறைய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்’ நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் நடுவராக இருந்தார். இந்நிலையில், கதாநாயகியாக சினிமாவில் களம் இறங்குகிறார் வாணி போஜன்.

ஜெய்யை வைத்து ‘ஜருகண்டி’ படத்தைத் தயாரித்த நடிகர் நிதின் சத்யா, தற்போது வைபவை வைத்து ஒரு படத்தைத் தயாரித்து வருகிறார். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இந்தப் படத்தை, சார்லஸ் இயக்குகிறார். சஸ்பென்ஸ் த்ரில்லராக இந்தப் படம் உருவாகி வருகிறது.

இந்தப் படத்தில் மூலம் கதாநாயகியாக பெரிய திரையில் அறிமுகம் ஆகிறார் வாணி போஜன்.

வைபவ் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் ஹீரோயினாக நடித்த ப்ரியா பவானிசங்கர், அதற்கு முன்னர் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x