Last Updated : 27 Feb, 2019 08:10 AM

 

Published : 27 Feb 2019 08:10 AM
Last Updated : 27 Feb 2019 08:10 AM

ஆடம்பர வாழ்க்கை உருவாக்கும் ஆபத்து!- ‘சத்ரு’ இயக்குநர் நவீன் நேர்காணல்

காவல்துறையில் சேர வேண்டும் என்ற கனவுடன் போலீஸுக்கு கை காட்டியாக வாழும் ஒரு இளைஞனாக ‘கிருமி’ படத்தில் நடித்த கதிர், இப்போது ‘சத்ரு’ படத்தில் காவல் ஆய்வாளராக நடித்திருக்கிறார்.

கதாபாத்திரத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் தரும் நடிகராக கவனம் பெற்றுவரும் கதிருடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் பற்றி...

கதை பிடித்தால் மட்டுமே ஒளிப் பதிவு செய்ய ஒப்புக்கொள்ளும் மகேஷ் முத்துசாமி இந்தப் படத்துக்குள் எப்படி வந்தார்?

‘சத்ரு’ படத்தை இயக்கியிருக்கும் ராதாமோகனின் உதவியாளர் நவீன் நஞ்சுண்டனிடம் உரையாடியதில் இருந்து...

கதாநாயகன் என்றில்லாமல் கதாபாத்திரங்களை விரும்பி ஏற்று நடித்து வருபவர் கதிர். அதற்குள் அவருக்கு போஸீஸ் சீருடையை மாட்டிவிட்டுவிட்டீர்களே?

நீங்கள் கவலைப்படுவதுபோல, ‘சாமி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ மாதிரியான மாஸ் போலீஸ் படம் அல்ல இது. பஞ்ச் வசனமோ, பறந்து பறந்து அடிப்பதோ இதில் கிடையவே கிடையாது. இதில் கதிர் ஏற்றிருப்பது, ஒரு உதவி ஆய் வாளர் கதாபாத்திரம். கதிரேசன் என்ற அவரது கதாபாத்திரம் பணியில் சேர்ந்து 2 வருடம்தான் ஆகிறது. போலீஸ் என்றில்லை; எந்தத் துறையாக இருந்தாலும் பணியில் சேர்ந்த புதிதில் ஒரு வேகம் இருக்கும் இல்லையா? அப்படி ஒரு வேகத்துடன் துருதுரு வென்று இருக்கும் ஒரு இளைஞர். அவ ரது கதாபாத்திரத்தை ‘ஸ்ரேஞ் காப்’ என்ற வார்த்தைகளுடன் அறிமுகப்படுத்தினேன். அதில் இருந்தே வழக்கமான போலீஸ் அல்ல என்பதை உணர முடியும். சினிமாக்களும் பொதுமனநிலையும் உருவாக்கிய போலீஸ் பிம்பத் துடன் பொருந்தாத விசித்திரமான ஒரு காவலர் அவர். அவரது நேர்மையும் முணுக் என்ற கோப மும் இந்தக் கதாபாத்திரம் என்ன வெல்லாம் செய்கிறது என்பதும் பார்வையாளர்களை ஆச்சரியப் படுத்தும்.

‘ராட்டினம்’ படத்தின் நாயகன் லகுபரனை இதில் வில்லனாக ஆக்கிவிட்டீர்களே?

அவரை வில்லன் என்று சொல் வதைவிட சமூகம் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் என்பேன். ‘தனி ஒருவன்’ படத்தில் அரவிந்த சாமிக்கு எந்த அளவுக்கு பெயர் கிடைத்ததோ, அதைவிட ஒருபடி அதிகமாக லகுபரன் கதா பாத்திரம் வரவேற்பைப் பெறும் என்று உறுதியாகக் கூறமுடியும்.

டிரைலரில் லகுபரனைப் பார்த் தால் பால்வடியும் முகமாகத் தெரிகிறார். ஆனால் போலீஸுக்கு சவால்விடும் செயல்களைச் செய்கிறார். அவர் அப்படி மாறி யதற்கான பின்னணியாக படத்தில் என்ன இடம்பெறுகிறது?

இன்றைய நவீன வாழ்க்கைதான் காரணம். உதாரணத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அரும் பாக்கத்தில் ஒரு கல்லூரி வாசலில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டார். கொலையின் நோக்கம் என்ன? அதனை யார் செய்தார்கள் என்று பார்த்தால், அந்தக் குற்றவாளி களும் மாணவர்கள்தான். மனதள வில் முதிர்ச்சி அடையாத பருவத் தினர். ஏன் கொலை அளவுக்குச் சென்றார்கள் என்றால் நவீன வாழ்க்கை அவர்கள் மீது செலுத்து கிற அழுத்தம்தான் காரணம். மற்ற வர்கள் முன்னால் நாமும் உயர்ந்து நிற்க வேண்டும் என்ற உந்துதல், தனது குடும்பப் பின்னணியை மீறி குற்றங்களில் ஈடுபட வைக்கிறது. 35 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு ஐ-போனை வாங்க, கொலையும்கூட செய்யலாம் என்கிற அளவுக்கு அவர்களை உந்தித் தள்ளுகிறது. எல்லா மாணவர்களுமே அப்படி ஓர் எல்லைக்கு போக மாட்டார்கள் என்றாலும் குழு மனப்பான்மையில் சிக்கிவிடும் நல்ல மாணவர்களும் இதில் உண்டு. இப்படி சமூகம் உருவாக்கிய அசட்டுத் துணிச்சல் கொண்ட ஒரு கதாபாத்திரம்தான் லகுபரனுடையது.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்து சாமி இந்தப் படத்துக்குள் எப்படி வந்தார்?

இந்தப் படத்தின் தயாரிப்பா ளர் ரகுகுமாரிடம் என்னை அறிமுகப் படுத்தியவர் ஒளிப்பதிவா ளர் மகேஷ் முத்துசாமி சார்தான். ‘அஞ்சாதே’, ‘நந்தலாலா படங்களில் உலகத்தர ஒளிப்பதிவை தந்தவர். ராதாமோகன் சாரின் ‘உப்புக்கருவாடு’ படத்துக்கு மகேஷ் முத்துசாமி சார்தான் ஒளிப்பதிவு செய்தபோது அவரிடம் ‘சத்ரு’ படத்தின் திரைக்கதையைக் கொடுத்தேன். அதைப் படித்த அவர் பாராட்டினார். பின்னர் அவரேதான் என்னை தயாரிப்பாளருக்கு அறி முகம் செய்துவைத்தார். அவர் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தது நேர்மையுடனும் விறுவிறுப்பாகவும் படத்தை எடுக்க எனக்கு உதவி இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x