Published : 22 Jan 2019 09:03 AM
Last Updated : 22 Jan 2019 09:03 AM

ஜி.வி.க்கு ஜோடியான ரைசா

அதர்வா, ஹன்சிகா நடிக்கும் ‘100’, ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ ஆகிய படங்களை தயாரித்து வரும் ஆரா சினிமாஸ் நிறுவனம் அடுத்து ஜி.வி.பிரகாஷ், ரைசா வில்சன் நடிப்பில் புதிய படத்தை தொடங்க உள்ளது. 

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இப்படம் திகில் கலந்த ஃபேன்டஸி திரைப்படமாக உருவாக உள்ளது. குறும்படங்கள் மூலமாக திரையுலக வட்டாரத்தில் அறியப்படும் கமல் பிரகாஷ், விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர். ‘

டிக் டிக் டிக்’, ‘மிருதன்’,  ‘கொடி’ ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளரான எஸ்.வெங்கடேஷ் இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் கதாநாயகன், இசையமைப்பாளர் என இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி.வி.பிரகாஷ். ‘பியார் பிரேமா காதல்’ படம் மூலம் வரவேற்பை பெற்ற ‘பிக் பாஸ்’ புகழ் ரைசா, கதாநாயகியாக நடிக்கிறார். விரைவில் தலைப்பு அறிவிக்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x