Published : 21 Jan 2019 07:47 PM
Last Updated : 21 Jan 2019 07:47 PM

தனுஷின் ‘அசுரன்’: இம்மாதம் 26-ம் தேதி படப்பிடிப்பு தொடக்கம்

தனுஷ் நடிக்கும் ‘அசுரன்’ படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் (ஜனவரி) 26-ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் கடைசியாக வெளியான படம் ‘வடசென்னை’. மூன்று பாகங்களாக உருவாகும் இந்தப் படத்தின் முதல் பாகம் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து இரண்டு பாகங்கள் உருவாக இருக்கின்றன.

ஆனால், அதற்கு முன்பாக தனுஷ் - வெற்றிமாறன் இருவரும் இன்னொரு படத்தில் இணைகின்றனர். அந்தப் படத்துக்கு ‘அசுரன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். வி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பது உறுதியாகி விட்டது. ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக தனுஷ் படத்துக்கு இசையமைக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். அதேபோல், வெற்றிமாறன் - ஜீ.வி.பிரகாஷ் கூட்டணிக்கும் இது நான்காவது படம். ஜீ.வி. இசையமைக்கும் 71-வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மாதம் (ஜனவரி) படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில், இம்மாதம் 26-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் தனுஷ். ட்விட்டரில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x