Published : 01 Jan 2019 01:07 PM
Last Updated : 01 Jan 2019 01:07 PM

சித்தார்த் - கேத்ரின் தெரேசா இணையும் அருவம்

சாய் சேகர் இயக்கத்தில் சித்தார்த், கேத்ரின் தெரேசா நடித்துவரும் படத்துக்கு 'அருவம்' எனத் தலைப்பிட்டு, ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

'சைத்தான் கே பட்சா', 'அவள் 2' உள்ளிட்ட பல படங்களில் பணிபுரிந்து வந்த சித்தார்த், சாய் சேகர் இயக்கத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். இப்படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

தலைப்பு இல்லாமல் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில், தற்போது 'அருவம்' என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு. இப்படம் குறித்து இயக்குநர் சாய் சேகர் கூறியிருப்பதாவது:

‘அருவம்’ என்ற தலைப்பு, இது திகில் படம் என்பதை உறுதி செய்கிறது. அருவம் என்பது, உருவம் என்பதின் எதிர்ப்பதமாகும். ஒவ்வொருவரும் நம்ப மறுக்கும், ஆனால் நம்மைச் சுற்றி நடக்கும் அமானுஷ்ய நிகழ்வுகள் நம்மை நம்ப  வைக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இப்படம் பேசும்.

இவ்வாறு இயக்குநர் சாய் சேகர் தெரிவித்துள்ளார்.

கபிர் துகன் சிங், மதுசூதன ராவ், ஸ்டண்ட் சில்வா, சதீஷ், ஆடுகளம் நரேன், குமரவேல், மயில்சாமி மற்றும் போஸ்டர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x