Published : 15 Dec 2018 09:22 AM
Last Updated : 15 Dec 2018 09:22 AM

‘வெற்றி’யுடன் தொடங்கிய ‘தர்மபிரபு’

நடிகர் யோகிபாபு நாயகனாக நடிக்கும் ‘தர்மபிரபு’ படத்தின் வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படத்துக்காக ரூ.2 கோடி செலவில் சென்னையில்  பிரம்மாண்டமாக அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கதை எமலோகத்தை மையமாக கொண்டது. எமனாக ராதாரவி நடிக்க, அவரது மகன் வேடத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

எமலோக பின்னணியுடன், முழுநீள காமெடி படமாக ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’ பாணியில் படமாக்க திட்டமிட்டுள்ளார் இயக்குநர் முத்துக்குமரன். விமல், வரலட்சுமி நடிப்பில் வெளிவர உள்ள ‘கன்னிராசி’ படத்தை இயக்கியுள்ளவர். படத்துக்கு இசை ஜஸ்டின் பிரபாகரன், ஒளிப்பதிவு மகேஷ் முத்துசாமி, படத்தொகுப்பு சான் லோகேஷ், கலை பாலசந்திரன்.

‘வெற்றி வெற்றி அமோக வெற்றி’ என்ற வசனத்தை முதல் ஷாட்டில் யோகிபாபு பேச, ‘தர்மபிரபு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x