Published : 08 Dec 2018 09:07 AM
Last Updated : 08 Dec 2018 09:07 AM
அஜித், நயன்தாரா நடிப்பில் பொங்கல் வெளியீடாக வரவுள்ள ‘விஸ்வாசம்’ படத்தின் பின்னணி இசையமைப்பு வேலைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் டி.இமான். மும்பை, தேனி என இரண்டு பின்னணியில் அஜித்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் அஜித் வரும் காட்சிகளில் வெவ்வேறு தீம் இசைகளை அமைத்துள்ளார் இமான். இது அஜித் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடிக்கும் என்கின்றனர் படக்குழுவினர். பொங்கல் வெளியீடாக ரஜினியின் ‘பேட்ட’ படமும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இரு படங்கள் வெளியீட்டில் ஏதேனும் மாறுதல் இருக்குமா? என்று விசாரித்தபோது, ‘‘பொங்கல் விடுமுறை நாட்கள் அதிகம் என்பதால் ஒரே நேரத்தில் இரு படங்களும் வெளியாவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT