Published : 08 Dec 2018 09:06 AM
Last Updated : 08 Dec 2018 09:06 AM

‘டிக் டாக்’கில் பட விளம்பரம்

ஆரி – ‘பிக் பாஸ்’ ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் உருவாகிவரும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ, ‘டிக் டாக்’ தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து படத்தின் நாயகன் ஆரி கூறியதாவது:

‘‘ஒரு படத்தின் புரொமோஷன் வீடியோ, ‘டிக் டாக்’கில் வெளியிடப்பட்டிருப்பது உலக அளவில் முதல்முறை. கால ஓட்டத்தில், காதலிப்பவர்கள் மாறினாலும், காதல் ஒருபோதும் மாறாது. எல்லா காலகட்டத்திலும் அது இளமையாகவே இருக்கும்.  அப்படி ஒவ்வொருவருக்கு உள்ளேயும் உலாவும் காதலை பெரிய அளவில் கூடிக் கொண்டாடுகிற இடமாக சமூக வலைதளம் உள்ளது. அதனால்தான் அவர்கள் தங்களது காதலுக்கு பெரிதும் பயன்படுத்தும்  ‘டிக் டாக்’ தளத்திலேயே பட அறிமுகத்தை ஆரம்பித்துள்ளோம். படத்தின் தலைப்பும் இதிலேயே அறிவிக்கப்பட உள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x