Published : 11 Nov 2018 01:55 PM
Last Updated : 11 Nov 2018 01:55 PM

பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்ட நடிகர் சரவணன்

‘பருத்தி வீரன்’ திரைப்பட புகழ் நடிகர் சரவணன், பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பினார்.

சேலத்தை சேர்ந்த பிரபல நடிகர் சரவணன் (50). இவர் பருத்தி வீரன், கடைக்குட்டி சிங்கம், கோலமாவு கோகிலா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சேலம் சூரமங்கலத்தில் வசித்து வரும் நடிகர் சரவணன், பன்றிக் காய்ச்சால் பாதிக்கப்பட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உடல் நலன் தேறி வீடு திரும்பியுள்ளார்.

இதுகுறித்து சேலம் மாநகர நல அலுவலர் பார்த்திபன் கூறும்போது, “நடிகர் சரவணன் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது மருத்துவப் பரிசோதனைகளில் தெரியவந்தது.

இதையடுத்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இரு தினங்களுக்கு முன்னர் குணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டன. மேலும், சூரமங்கலத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x