Published : 12 Oct 2018 09:26 AM
Last Updated : 12 Oct 2018 09:26 AM

விளம்பரம் இல்லாமல் சின்னத்திரை சினிமா

சின்னத்திரையில் விளம்பரங்களே இல்லாமல், தமிழ் திரைப்படங்களை ஒளிபரப்பும் வேலையில் டாடா ஸ்கை நிறுவனம் இறங்கியுள்ளது.

‘டாடா ஸ்கை தமிழ் சினிமா’ என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாதமும் குடும்பக் கதை, ஆக்சன், கிரைம், திரில்லர் என ஆண்டுக்கு 100 படங்களுக்கு மேல் ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர். விஜய் தொலைக்காட்சியுடன் இணைந்து தமிழ் திரைப்படங்களைத் தேர்வு செய்துள்ளனர். இந்த பட்டியலில் ‘பாகுபலி 2’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘துப்பாக்கி’, ‘விஸ்வரூபம்’ ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் இந்த மாதத்துக்கான பிரிமியர் படமாக விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘காளி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது. மராத்தி, பஞ்சாபி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளைத் தொடர்ந்து தற்போது தமிழில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கான அறிமுக விழா சென்னையில் நேற்று நடந்தது. இதில் டாடா ஸ்கை அதிகாரி அருண் உன்னி, நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி (டிடி) பங்கேற்றனர். டிடி பேசும்போது, ‘‘மொழிகளை ஒன்றுசேர்ப்பதில் கலையின் பங்களிப்பு முக்கியமானது. அதன் ஒரு வடிவமாகத்தான் இதுபோன்ற புதிய முயற்சிகளைப் பார்க்க வேண்டும்.  வீட்டில் விளம்பரம் இல்லாமல் ‘நான்-ஸ்டாப்’ ஆக சினிமா பார்க்கும் மனநிலை குதூகலமானது. அது தற்போது சாத்தியம் ஆகியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x