Published : 12 Oct 2018 09:25 AM
Last Updated : 12 Oct 2018 09:25 AM

பிக் பாஸ்-2’ கொண்டாட்டம்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் 2’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மொத்த குழுவினரும் சேர்ந்து கொண்டாடும் விதமாக, ‘பிக் பாஸ் 2 கொண்டாட்டம்’ என்ற நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் வரும் சனி, ஞாயிறு ஆகிய 2 நாட்கள் ஒளிபரப்பாகின்றன. இதில் மஹத், யாஷிகா உள்ளிட்டோரின் நடனம், ஐஸ்வர்யா, ரம்யாவின் பாடல்கள், சென்றாயன், பாலாஜி உள்ளிட்டோரின் காமெடி நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறுகின்றன. இவர்களோடு ஜனனி ஐயர், மமதி சாரி, பொன்னம்பலம், ரித்விகா உள்ளிட்ட ‘பிக் பாஸ்’ குழுவினர் வழங்கும் வித்தியாசமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. ‘பிக் பாஸ் ஹவுஸ்’ அனுபவங்களையும் அவர்கள் பகிர்ந்துகொள்கின்றனர். இந்த ஒட்டுமொத்த குழுவினரின் கொண்டாட்டத்தை சிறப்பிக்கும் விதமாக விஜய் தொலைக்காட்சி நட்சத்திரங்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியும் இடம்பெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x