Published : 23 Sep 2018 09:05 AM
Last Updated : 23 Sep 2018 09:05 AM

திரை விமர்சனம்- சாமி ஸ்கொயர்

சீயான் விக்ரம் - இயக்குநர் ஹரி கூட்டணியில் 2003-ல் வெளிவந்த ‘சாமி’ வெற்றிப் படத்தின் இரண்டாம் பாகமாக விரிகிறது திரைக்கதை. விக்ரமிடம் (ஆறுச்சாமி) சிக்காமல் தலைமறை வான கோட்டா சீனிவாசராவ் (பெரு மாள் பிச்சை) உயிருடன் இருக் கிறாரா என்ற சந்தேகம் இலங்கை யில் வசிக்கும் அவரது மகன் பாபி சிம்ஹாவுக்கு எழுகிறது. உடனடியாக தனது 2 அண் ணன்களோடு திருநெல்வேலிக்கு வருகிறார். தன் தந்தையை விக்ரம் உயிரோடு எரித்துக் கொன்றதை தெரிந்துகொள்கிறார். நகரின் நடு வில் தந்தைக்கு சிலை வைத்து விட்டு, ஆறுச்சாமியை தீர்த்துக் கட்ட திட்டம் வகுக்கிறார்.

இந்த இடத்தில், ‘28 ஆண்டு களுக்கு பிறகு’ என மறுவேகம் எடுக்கிறது கதை. ஆறுச்சாமியின் மகன் ராம்சாமியாக அறிமுகமா கிறார் அடுத்த விக்ரம். ஐஏஎஸ் தேர்வு எழுதி, முடிவுக்காக காத் திருக்கும் வேளையில், மத்திய அமைச்சரான பிரபுவின் மேலாள ராக பணியாற்றுகிறார். பாபி சிம்ஹா - ‘ராம்சாமி’ விக்ரம் சந்திக் கின்றனர். அப்போது என்ன நடக் கிறது? 28 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன என்ற கேள்வி களுக்கு விடை அளிக்கிறது மீதிப்படம்.

தனக்கே உரிய விறுவிறுப்பு, வேகம், ஆக்சன் என முதல் பாகத்தின் துடிப்பை முழுமையாக கொண்டுவர முயற்சி செய்திருக் கிறார் இயக்குநர் ஹரி.

எத்தனை குண்டர்கள் வந்தா லும் நரம்பு புடைக்க சளைக்காமல் அந்தரத்தில் தூக்கி வீசும் சாமியாக அவதாரம் எடுத்திருக்கிறார் விக்ரம். வயது கூடிப் போனது கேமராவின் முக நெருக்கத்தில் தெரிந்தாலும், உடம்பை ஃபிட்டாகவே வைத் திருக்கிறார். படம் முழுக்க அவரது ஆதிக்கம்தான். பல இடங்களில் மிரட்டியிருக்கிறார். ஐஏஎஸ் அதிகாரிக்கான பயிற்சி காலகட்டம், திருநெல்வேலிக்கு வந்து ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்றதும் காட்டும் மிடுக்கு என கவர்கிறார். ஆனால், வலு வற்ற திரைக்கதை மற்றும் அடுத் தடுத்து எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகளாக இருப்ப தால், அவரது முயற்சிகள் வீணா கின்றன.

முதல் பகுதியில் விக்ரமின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ். அவரது நடிப்பு ஓ.கே. என்றா லும், கதாபாத்திரத்துக்கு கொஞ் சம்கூட பொருந்தவில்லை. நல்ல வேளையாக, அவரை படம் முழுவதும் காட்டி வெறுப்பேற்ற வில்லை.

கீர்த்தி சுரேஷுக்கு பெரிதாக சாதிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கொடுத்த பாத்திரத்துக்கு குறை வைக்காமல் நடனம் ஆடு கிறார். சீயானை நினைத்து ஏங்குகிறார்.

படம் முழுவதும், விக்ரம் முறைப்பாகவே திரிவதால் காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை.

சூரியின் பாவனை, பேச்சு, நடிப்பில் எந்த வித்தியாசமும் இல்லை. காமெடி என்ற பெயரில் காட்டுக் கூச்சல் போட்டு, அமைச் சரின் மச்சானாக வெட்டி அலப் பறை செய்து ஓவராக வெறுப் பேற்றுகிறார். ஒருசில இடங்களில் மட்டும் கைதட்டல் அள்ளுகிறார்.

வில்லனாக பாபி சிம்ஹா, கடைசி வரை விறைப்பாக நடிக் கிறார். விக்ரமுக்கு சரியான போட்டி.

பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி குடும்பப் பின்னணி கதை அமைப்பு சிறப்பு. வழக்கமாக சினிமாவில் காட்டப் படும் அமைச்சர் குடும்பத்துக்கான பார்முலாவில் இருந்து சற்று வித்தியாசத்தோடு அணுகியுள்ள விதம் ரசிக்க வைக்கிறது. விக்ரம் - கீர்த்தி ரொமான்ஸ் இடங்கள் கவர்கின்றன. ஆனால், குடும்பப் பின்னணி கதை ஓட்டம் தொடங்கி, காவல்துறை திருப்புமுனை வரை ஹரியின் முந்தைய படங்களின் தழுவல் மேலோங்குகிறது. தவிர, திருப்பங்களும், எதிர்பார்ப்பு களும் வில்லன் மற்றும் அவரது சகோதரர்கள் பகுதிகளில் பெரிதாக இல்லை. இதுவும், படத்தின் சுவாரசியத்தை குறைத்துவிடு கிறது. பலரை ஒரே அடியில் வீழ்த்து வது, கார்கள் அந்தரத்தில் பறப் பது என மாஸ் ஹீரோயிஸம் காட்டு கிற பழைய பாணியிலேயே கதை நகர்வதால் ஒருகட்டத்தில் பார்வை யாளர்கள் சோர்வடைகின்றனர்.

அமைச்சர் பிரபு - வில்லன் பாபி சிம்ஹா தொடர்புக்கான காரணங்களை இன்னும் தெளிவாக புரிய வைத்திருக்கலாம்.

ஹரி படங்களில் பெரிதாக லாஜிக் பார்க்கமுடியாதுதான். ஆனாலும், திடீரென வெளிநாட் டில் இருந்து வந்த ஒருவர், ஒரு மாவட்டத்தில் பெரிய தாதாவாகி, பணம், ஆள் கடத்தல், தந்தைக்கு சிலை வைப்பது என ரவுடித்தனம் செய்வதை அத்தனை போலீ ஸாரும் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என ஒரேயடியாக பூசுற்றுகிறார்.

முதல் பாகத்தின் பாடல்கள் ஏற்படுத்திய தாக்கம் தனி. இங்கு பின்னணி இசை அளவுக்கு பாடல் களுக்கு தேவி ஸ்ரீபிரசாத் மெனக் கிடவில்லை. பாடல்கள் கதை ஓட்டத்துக்கு இடையூறாகவே உள்ளன.

படத்துக்கு 2 ஒளிப்பதிவாளர் கள். ப்ரியன் மறைவுக்குப் பிறகு, வெங்கடேஷ் அங்குராஜ் உள்ளே வந்தாலும் முடிந்தவரை வித்தியாசம் தெரியாமல் பதிவு செய்திருக்கிறார்.

‘சாமியின் வேட்டை தொடரும்’ என படம் முடிகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை, 3-ம் பாகத்திலாவது ஹரி பூர்த்தி செய்கிறாரா என பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x