Published : 20 Sep 2018 09:55 AM
Last Updated : 20 Sep 2018 09:55 AM

ஷங்கரின் ‘2.0’ சீக்ரெட்!

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும்  ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  விரைவில் இறுதிகட்டத்தை எட்டும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் முழு நேர அரசியலில் ரஜினி ஈடுபட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால்  ரஜினி தற்போது ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படத்தின் கதையையும் இறுதி செய்திருக்கிறார்.  இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கிடையே 2.0 படத்தின் ரிலீஸுக்கான முழு வேலைகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார். படத்தின் இடைவெளி வரைக்கும் ரஜினியின் ராஜ்ஜியமாம். இடைவெளிக்கு 10 நிமிடங்கள் முன்புதான் வில்லன் அக்‌ஷய்குமார் என்ட்ரி. அதில் இருந்து ஒட்டுமொத்த படமும்  அக்‌ஷய்குமாரின் ராஜ்ஜியம்தானாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x