Published : 15 Sep 2018 12:31 PM
Last Updated : 15 Sep 2018 12:31 PM

வரும் 21-ம் தேதி ‘சாமி ஸ்கொயர்’ ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

வரும் 21-ம் தேதி ‘சாமி ஸ்கொயர்’ படம் ரிலீஸ் ஆகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சாமி ஸ்கொயர்’. 2003-ம் ஆண்டு வெளியான ‘சாமி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. ஹரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் விக்ரம் - கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ளனர்.

முதல் பாகத்தில் த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில், இரண்டாம் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். பிரபு, பாபி சிம்ஹா, ஜான் விஜய், சூரி, இமான் அண்ணாச்சி, ரமேஷ் கண்ணா, டெல்லி கணேஷ், உமா ரியாஸ், சுதா சந்திரன் என ஏகப்பட்ட பேர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமீன்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். பிரியன், வெங்கடேஷ் அங்குராஜ் என இருவர் ஒளிப்பதிவு செய்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ படத்துக்கு, தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஆக்‌ஷன் மசாலா படமான இது, வருகிற 21-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘களவாணி மாப்பிள்ளை’, ‘ராஜா ரங்குஸ்கி’, ‘வண்டி’, ‘ஏகாந்தம்’ ஆகிய படங்களும் இதே தேதியில் ரிலீஸாக இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x